பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮖ 34 சு. சமுத்திரம் சும்மா இருங்கப்பா. சின்ன மீனைப் போட்டுத்தான் பெரிய மீனை எடுக்கணும்' என்றாள் மோகினி. சாப்பாட்டுக்கே திண்டாட்டமா இருந்துட்டிருக்கே!" என்று ஏகாம்பரம் நெட்டுயிர்த்தார். 6 எங்கெல்லாமோ சுற்றியலைந்துவிட்டு ஒரு நாள் மோகினியிடமே திரும்பி வந்தான் சீனிவாசன். விடுதலைப் பத்திரம் வாங்கிக்கொண்டு போனவனுக்கு மறுபடி என்ன வேலை என்று மோகினிக்குக் கோபம் வந்தது. தொலைந்து போகிறான் என்று வீட்டில் இருப்பதற்கு இடம் கொடுத் தாள். கிட்டத்தட்ட பிச்சைக்காரன் மாதிரி வந்திருந்த சீனிவாசனிடம் மாமனார் ஏகாம்பரத்துக்கு எவ்விதப் பாசமும் ஏற்பட நியாயமில்லை. என்னய்யா, அப்பா எவ்வளவு வைச்சிட்டுப் போனார்?' என்று வேண்டுமென்றே கிண்டல் செய்தார். சில சமயங்களில் மனம்விட்டுப் : பேசிச் சண்டை போட்டுக்கொள்வார்கள். மோகினி அதைப் பார்ப்பாளே தவிர, சீனிவாசனுக்குப் பரிந்து வரமாட்டாள். எப்படியோ இரண்டு மாதங்கள் ஓடின. மோகினியும் சீனிவாசனும் அதிகமாகப் பேசுவதில்லை. 'அய்யோ... ஒங்க பிள்ள என்னை எப்டில்லாம் உதைக்குது. இதோ பாருங்க" என்று வயிற்றைக் காட்டிச் சொல்லத் துடிக்கும் உணர்வை வந்த வேகத்திலேயே அடக்கிக்கொள் வாள். ஏகாம்பரம் அவள் கண்முன்னாலேயே மருமகனை ஒருநாள் தனக்கு வெற்றிலை பாக்கு வாங்கிக்கொண்டு வரச் சொன்னார். மனைவிக்காரி அதைக் கண்டிக்காததைச்