பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் I 37 உறுமினான். இந்த வன்முறையைச் சிறிதும் எதிர்பாராத ஏகாம்பரம், முதலில் பிரமை பிடித்தவர்போல் சிறிது நேரம் நின்றுவிட்டு, பின்னர் நான் இடுப்பில எடுத்து வளத்த என் குழந்தையையாடா இடுப்பில உதைக்கிறே... பாவிப்பயலே... அவள் கர்ப்பிணின்னு தெரிஞ்சும் இடுப்புல உதைச்சிட்டியே! அபார்ஷன் ஆயிட்டா ஒங்கப்பனாடா மருந்துக்குப் பணம் தரப்போறான்? பாழாப்போற பாவி..." என்றார். இதற்குள், உள்ளே படுத்துக் கிடந்த அம்மாக்காரி தட்டுத் தடுமாறி அங்கே வந்தாள். சீனிவாசன் வெளியேறிவிட்டான். மோகினி ஒன்றும் பேசவில்லை. கன்னத்தைத் தடவி விட்டுக்கொண்டாள். இடுப்பை இழுத்துவிட்டுக் கொண்டாள். அப்பா சொன்னது மாதிரி அபார்ஷனாயிடுமோ! அய்யோ... என் குழந்த தாங்காதோ... தங்காதோ... அது போயிட்டா நான் மட்டும் எதுக்காக இருக்கணும்? மாட்டேன்...இருக்கமாட்டேன். மோகினியின் மனம் மாறியதோ இல்லையோ, முகம் கல்லாக மாறியது. கணவன் என்ற ஒருவன் இறந்துவிட்ட தாக அப்போதே அனுமானித்துக்கொண்டாள். அபார்ஷன் ஆகிவிடலாம் என்கிற சந்தேகம் விசுவரூபமெடுக்க, டாக்ட ரிடம் போகலாமா என்று யோசித்துக்கொண்டே ஒரு மூலை .யில் குன்றிப்போய் உட்கார்ந்தாள். இரவு எட்டுமணி சுமாருக்கு சீனிவாசன் வந்தான். இப்போது பையில் ஒரு பாக்கெட் சிகரெட் இருந்தது. போனால் போகுதுன்னு வந்தேன். வாயும் வயிறுமாய் இருக்கிறவளை அந்தரமா விட்டுப்போகக் கூடாதுன்னு வந்தேன். இனிமேல் ஒரு தரம் இப்படிப் பேசினால் ஒனக்கும் எனக்கும் ஒண்னும்கிடையாது’ என்று சொல்லிக்கொண்டே வந்தான். எரிந்து விழும் ஏ. கா ம் பர ம் இப்போது அவனை எதிர்த்துப் பேசவில்லை. காலிப் பயலிடம் என்ன பேச்சு...