பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் I too என்ன பேபி, நான் கெட்டதை சொல்றதா ஏன் எடுத்துக்கிற? உண்மை கசப்பா இருந்தாலும் சொல்ல வேண்டாமோ? ஜோதிடமுன்னா சோர்ந்து போகப் போற வனை திடப்படுத்துறதுன்னு அர்த்தம். நான் நல்லத காட்டி கெட்டத விடச்சொல்றேன். இவரைப் பாரேன். இன்னும் ரெண்டு வருடத்துல கார் வாங்கப் போறார், பங்களா கட்டப் போறார். தமிழ்நாடு முழுவதும் பிஸினஸ் மேக்னட் யாருன்னா சங்கர்னு சொல்லப்போவுது. இது நடக்கத்தான் போவுது. இவ்வளவு அருமையான ஜாதகன் பத்துப் பொருத்தத்துல ஒரு பொருத்தங்கூட இல்லாத ஒரு பொண்ணைக் கட்டுறதுனால அழிஞ்சி போயிடுவார் என்கிற உண்மையை சொல்லாட்டா நான் அழிஞ்சி போயிடுவேன். ஜாதகம் நெருப்பும்மா அதுகிட்ட விளையாடக்கூடாது. மகான்கள், தரிசனம் பண்ண வந்தவங்கள்ல கிறுக்கன் மாதிரி தற்செயலா வேடிக்கை பார்க்க வந்தவனைப் பிடிச்சு இழுத்து திருநீறு பூசுவாங்க. பக்திமான்களைக்கூட கண்டுக்க மாட் டாங்க. ஏன் தெரியுமா?’’ ஏன்?" அந்தக் கிறுக்கன் பூர்வஜென்மத்துல புண்ணியம் செய்து அந்தப் புண்ணியம் இந்த ஜென்மத்தில அவருக்கு வராதபடி ஏதோ ஒண்னு தடயா இருக்கும், அந்தத் தடையை உடைக்க வேண்டியது மகான்களோட கடமை. இதுமாதிரி இவரு பூர்வஜென்மத்தில செய்த புண்ணியம் சனி முடிஞ்சதும் வரணும். அதுக்குத் தடையா இருப்பதை உடைக்க முடியாவிட்டாலும் உருட்டவாவது செய்யணு மில்ல?" மோகினி சமாதானப்படாமல், கோபமாகப் பேசினாள். கார் வாங்கப்போகும் சங்கருக்கும் கொஞ்சம் தெம்பு வந்தது. மோகினி தனக்காக அப்பாவைத் திட்டுவதை தன் பொருட்டு அந்த வீட்டில் குழப்பம் நடப்பதை சங்கர் விரும்பவில்லை. சவாரேங்க' என்று சொல்லிவிட்டு, மேற்கொண்டு