பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 சு. சமுத்திரம் பேசாமல் எழுந்து வெளியேறினான். அவனை அந்தக் கோலத்தில் தனியாக விட முடியுமா? அந்தப் பழிபாவம் வேறயா? மோகினி அவனைத் தனியாக விடாமல் பஸ் நிலையம் வரை க் கு ம் பக்கத்திலேயே தோளுக்குத் தோளாகத் துணையாக நடந்தாள். ஒரு வாரம் ஒடியது. ஊரிலிருந்து திரும்பி வந்த லீலா சங்கரை நேருக்கு நேர் பார்க்கவே நாணப்பட்டாள். கல்யாணம் பெண்ணாயிற்றே. வெட்கம் பிடுங்கித் தின்னாதா! வீட்டில் எவ்வளவு அமர்க் களம்! அம்மாவும் அப்பாவும் அத்தை மகனைக் கட்ட வேண்டும் என்று சொல்ல, இவள் சங்கர்தான் எனக்கு அத்தை மகன், வேறு யாரையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டேன்' என்று சொல்லிவிட்டாள். ஆனால் சங்கர் அவளைப் பார்த்தும் பாராதவன்போல இருந்தான். அவள் காத்திருப்பாள் என்று தெரிந்தும் அவன் கடற்கரைக்குப் போகவில்லை. மறுநாள். எள்ளுங்கொள்ளு மாய் நின்ற லீலாவை ஏறெடுத்துப் பார்க்கவில்லை, லீலா வுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. தனியாகப் பேச சந்தர்ப்பம் கொடுக்காமலே, மானேஜரிடம் போய்விடுவான். அலுவலகம் முடிவதற்குக் கால் மணி நேரத்திற்கு முன்னதாகவே வெளியே போய்விடுவான். வீலாவுக்கு அன்பு ஆத்திரமாகியது. ஒருநாள் வழக்கம் போல் முன்னதாகப் போனவனின் பின்னாலேயே போனாள்: * சங்கர்!" என்று உரக்க கத்தினாள். திரும்பிப் பார்த்த வனால் ஒட முடியவில்லை. எதிரே ஆட்கள். வேறு வழியில்லாமல், அவளுடன் புல்வெளியில் ஒதுங்கினான்.

சங்கர், எனக்கும் சுயமரியாதை உண்டு. ஒங்களுக்குக் கல்யாணத்துல இஷ்டமில்லன்னா நான் வற்புறுத்தப் போறதில்ல. ஆனால் காரணம் தெரிஞ்சிக்கலாமா? ஏன் பேசமாட்டேங்கிறீங்க? பிளிஸ், பேசுங்க."