பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 167 ஆட்டிக்கிட்டு, திமிரா நடப்பியே? இப்ப என்னடி ஆச்சு? ஒன்ன மாதிரி எத்தனபேர எத்தன தடவ பார்த்திருப் பேன். முளைச்சு மூணு இல விடல. ஒன் திமிரை என் கிட்டேயே காட்டினேல்ல. பாரு... பாரு..." மோகினி உடனடியாக அவளைக் கூப்பிடவில்லை. அரைமணி நேரம் காக்க வைத்தாள். இன்னும் காக்க வைத் திருப்பாள். ஆனால் வெளியே வேலை இருந்தது. காலிங் பெல்லை அழுத்தினாள். ஒடுங்கிப்போய் மூலையோடு மூலையாக நின்று கொண்டு மேற்கொண்டு நடக்கலாமா கூடாதா என்று வனிதா தயங்கியபோது, வா... வனிதா உட்கார்' என்றாள் மோகினி. பரவாயில்ல! நிக்கிறேன் மேடம்!" மோகினி அவளைக் கட்டாயப்படுத்தவில்லை. என்ன விஷயம்? எப்டி இருக்கிற? அப்பா செளக்கியமா? கல்யாணம் எப்போ வில்லியம்ஸின் மகன் ராஜனை நீ கல்யாணம் பண்ணிக்கப்போறியாமே? ராஜன் நல்ல பையன். புளியமரம்தான் பிடிச்சிருக்கே, கங்ராசுலேஷன்: ' அது புளியமரம்தான் மேடம். அதுலதான் நான் தூக்குப் போட்டுச் சாகணும்." வனிதாவால் கண்ணிரை அடக்க முடியவில்லை. தோள் மறைய மூடியிருந்த புடவை முனையை எடுத்துத் துடைத்துக் கொண்டாள். அந்த இருபது வயதிலும் ஒரு கிழவிக்குரிய விரக்தியுடன் நின்றுகொண்டிருந்தாள். கம்பியிலிருந்து எடுத்துப் போடப்பட்ட முல்லைக்கொடி போல, துவண்டு போய் நின்றாள். மோகினியை நிமிர்ந்து பார்த்தாள். மீண்டும் கண்ணிர் விட்டாள். மோகினி துடித்துப் போனாள்,