பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் இல்லன்னு ஒதுக்கும்போது, என் சொத்து ஏன் அவளுக்குப் போகணும்? அவள் உருப்படியாய் வச்சிருப்பாள் என்கிறது என்ன நிச்சயம்? தணிகாசலம், தன்னை ஏங்கிய முகத்தோடோ அல்லது விங்கிய முகத்தோடோ பார்த்த மருமகளிடம், வக்கீலை வரச் சொல்' என்று சொல்லப்போனார். ஆனாலும் அதற். கான வார்த்தைகள் வரவில்லை. ஆயிரந்தான் இருந்தாலும், பானு அவர் மகள். ஒரு வே ைள அவள் நிலைமை எப்படியோ, விட்டுப் பிடிப்போம். அவர் திக்குமுக்காடிச் சொன்னார். இன்னைக்கு யோசித்து நாளைக்குச் சொல்றேன்." மைதிலி இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு?’’ என்று கேட்டபடியே மாமனாரைப் பார்த்தபோது, அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டார். அப்போது அந்த பக்க மாக வந்த வேலைக்காரி முத்தம்மாவிடம், மாத் திரை களைக் கொடுத்துவிட்டு, மைதிலி கால் செருப்புகள் தரையை மத்தளம் போல் தேய்க்க ஆங்காரமாக திரும்பிப் போனாள். முத்தம்மா அந்தப் பெரியவரைத் துரக்கினாள். அவர் தலையை மடியில் போட்டபடியே மாத்திரைகளை நீரில் கரைத்து, குவளையில் ஊற்றி குழந்தைக்குக் கொடுப்பது போல் கொடுத்தாள். அதைக் குடித்து முடித்த தணிகாசலம் இதுவரை தன்னால் ஒரு பொருட்டாக நினைக்கப்படாத அவளிடம், தன் தாயைக் கண்டார். குழந்தைபோலவே முறையிட்டார். "முத்தம்மா!' என்னங்க அய்யா...' என் மகளை எப்படி வளர்த்தேன்னு நான் சொல்ல வேண்டியதில்ல. அவளுக்காகவே இரண்டாவது கல்யாணம் செய்துக்காமல் இருந்தேன். அவளுக்கும் சொத்துல சரிக்குச்