பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் திடீரென்று ஸ்கூட்டர் சத்தம். அதிலிருந்து மனைவி யுடன் இறங்கிய பாஸ்கரன் வேகமாய் உள்ளே வந்தான். அண்ணனைப் பார்த்ததும், ஆற்றமுடியா துக்கத்தோடு அவனைக் கட்டிப் பிடிக்க வந்த பானுமதியிடமிருந்து விலகிய படியே அவன் கர்ஜித்தான். ஒன்னை யார் இங்கே வரச்சொன்னது? ஒன்னாலேயே என் அப்பாவுக்கு உடம்பு இப்படி ஆயிட்டுது! அவரை தேற்றுவதற்கு நான் படாத பாடு பட்டுகிட்டு இருக்கேன். இந்தச் சமயத்தில இருக்கிற உயிரையும் எடுக்கவா வந்தே? சதிக்காரி! மானங் கெட்டவள்! கெட் அவுட்...ஐ சே கெட் அவுட்...ஒன்னைத்தான்...ஒன் புருஷனை கூட்டிட்டு மரியா தையாய் வெளியேறு...”* தணிகாசலம், மகனைப் பார்த்து ஏதோ சொல்லப் போனார். கை கால்களை ஆட்டப் போனார். அவன் அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. கூப்பாடு போட் டான். கெட் அவுட்...அவுட் என்றான். எதுவுமே நடக்காததுபோல் கைகளைக் கட்டியபடி தலை தாழ்த்தி நின்ற செல்வத்தைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆத்திரம் அசிங்கமான வார்த்தைகளாய் வந்தன. ஏய் ஸ்கவுண்ட்ரல்... என் அப்பாவைக் கொல்றதுக்கா வந்தே..." அண்ணனின் வார்த்தைகளை காதில் வாங்காமல், பெற்ற பாசப் புயலில் சிக்குண்டிருந்த பானுவுக்கு, அவன் வார்த்தைகள் லேசாய் உறைத்தன. மெள்ள அடித்தொண் டைக் குரலில் கேட்டாள். "நீ பேசறது ஒனக்கே நல்லா இருக்குதா அண்ணா?’’ "அண்ணான்னு சொல்லாதடி அடங்காப்பிடாரி... முத்தம்மா இவங்களை ஏன் உள்ளே விட்டே?”*