பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 67 நெருங்கிப் பார்த்தான். பயந்து பயந்து கரங்களை நீட்டி அவள் மூக்கில் விரலை வைத்துப் பார்த்தான். மார்பில் கை போட்டுப் பார்த்தான். இரண்டு நிமிடம் ஸ்தம்பித்து நின்றான். பிறகு அவளைத் தன் மடியில் கிடத்தியபடியே பானு... ஊ... ஊ' என்று வீறிட்டான் என் பானு ஊ...' என்று ஓங்காரமிட்டான். அய்யோ பானு..." என்று அலறினான். - அவன் போட்ட கூக்குரலில், மைதிலி ஓடி வந்தாள். பாஸ்கரன் எச்சில் கையோடு ஓடி வந்தான். பானுவைப் பார்த்துவிட்டு மைதிலி, • அய்யோ... என் வண்ணக் கிளியே' என்று அலறினாள். பாஸ்கரன் என் செல்லத் தங்கமே!" என்று வீறிட்டான். அந்த வண்ணக்கிளி- அந்த செல்லத் தங்கம்- போக வேண்டிய இடத்திற்குப் போய்விட்டதுபோல் வதங்கிக் கிடந்தது. 11 எந்தக் ஒழமையில்- எந்த நேரத்தில்- செல்வம், பேக்டரியின் பொறுப்பை ஏற்பதாக இருந்ததோ அந்தக் ஒழமையில்- அந்த நேரத்தில்- பானு, குழியில் இறக்கப் பட்டுக் கொண்டிருந்தாள்: சொல்லி மாளாத கூட்டம். கல்லூரித் தோழிகள், பேக்டரி தொழிலாளர்கள், தியேட்டர் ஊழியர்கள், சொந்த பந்துக்கள். முறைப்படி குழியில் கிடத்தப்பட்டவள்மேல் பாஸ்கரன், மண்ணை எடுத்துப் போடவேண்டும். நான்கு பேர் அவனைக் கைத்தாங்கலாக கூட்டிப்போனார்கள்: