பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சு. சமுத்திரம் சத்தியத்துக்கு க்

  • பானு... பானு' என்ற விண்ணொலிக்க, மண்ணொலிக்கப் பிளிறினான். அவன் மண்ணைப் போட்டு முடித்ததும், பலர் வந்தார்கள். இறுதியில் செல்வத்தை பேக்டரி மானேஜர் பிடித்துக்கொண்டு வந்தார். அவர் முன்னால் பதுமைபோல் நடந்த செல்வம், குழிக்குள் கிடந்தவளைப் பார்த்தான். யாரோ அவன் கையில் மண்ணெடுத்துக் கொடுத்தார்கள். அவன் அதைக் குழியில் போடாமல், தன் தலையில் போட்டான். பிறகு திடீரென்று பானு' என்று கதறியபடி குழிக்குள் பாயப்போனான். சுந்தரமும் யாரோ இன்னும் நாலுபேரும் அவனைப் பிடித்து சற்று தொலைவில் உட்கார வைத்தார்கள்.

குழி மூடப்பட்டது. ஒரு வாழ்க்கை மூடப்பட்ட குழி யானது, ஒவ்வொருவராய், மெளன. மெளனமாய் அகன்றுகொண் டிருந்தார்கள். பாஸ்கரன் கூட நடக்கத் துவங்கினான். கீழே உட்கார்ந்திருந்த செல்வத்தின் கைகளை சுந்தரம் தூக்கி னார். அவனுக்கு அது, கடற்கரையில் பானு தன்னை இழுத்தது போலிருந்தது. அவளைப்போலவே, அவனும் அப்படியே இருந்தான். யாரோ கொஞ்ச நேரம் இங்கேயே இருந்துட்டு வரட்டும்’ என்றார். எல்லோரும் போய்விட்டார்கள். செல்வம் இருந்த கோலத்திலேயே இருந்தான். பார்த்த பார்வையிலேயே காணப்பட்டான். பக்கத்துணையாக நின்ற சுந்தரம், இறுதி யில் அவனோடு உட்கார்ந்திருந்தார். நான்கைந்து கொதத னார்கள், சித்தாட்கள் அந்த குழிக்கு சமாதி கட்டும் வேலை யைத் துவக்கப்போனார்கள். அவனோ, சமாதியடைந் தவன்போல், சற்றும் நகராமல், விழிகளை ஆட்டாமல், வேதனையைத் தினறவனாய் வேதனையால் தின்னப்பட்ட வனாய் கிடந்தான்.