பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 போலீஸ் இன்ஸ்பெக்டர் திம்மைய்யா வேறு யாரு மில்லை. பாஸ்கரன் கொடுத்த பார்ட்டியின் பதவியுயர்வு கதா நாயகனான அதே திம்மையாதான். சுந்தரம் அவர் முன்னால் வந்து நின்று முறையிட்டார். இவர், மிஸ்டர் பாஸ்கரரோட பிரதர் இன் லா ஸார்: நீங்க கூட இடுகாட்டுக்கு வந்திருக்கிறீங்களே! அ ந் த ப் பெண்ணோட ஹஸ்பென்ட் சார்! இவரை பாஸ்கரன் வீட்டுக்குள் சேர்க்க மறுக்கிறார் சார்! இவ்வளவுக்கும் அந்த வீடு இவர் ஒய்ப் பேர்லதான் இருக்கு சார்! சட்டப்படி ஒய்புக்கு வாரிசு புருஷன்தானே!" திம்மைய்யா, தில்லோடு பேசினார். இது சிவில் கேஸ்-கிரிமினல் இல்லே! பொஸ்ஸஷன் இஸ் நைன்டி பர்சென்ட் ஆப் தி லா. அதாவது, இவரும் வீட்டுக்குள்ளே இருந்து- மிஸ்டர் பாஸ்கரன் இவரை கழுத் தைப் பிடித்தோ, பிடிக்காமலோ வெளியே தள்ளினால், அது கிரிமினல் அபென்ஸ்! பட் இவர் போனபிறகு- அவர் கேட்டைப் பூட்டினால், அது சிவில் அபென்ஸ். கோர்ட்டுக்கு போங்க!” சுந்தரம் புரிந்துகொண்டார்; இவனுக்கும் பாஸ்கர னுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்குது. இல்லன்னா, நான் சொல்லாமலே பாஸ்கரன் கேட்டைப் பூட்டின விஷயம் இவருக்கு எப்படித் தெரியும்? சுந்தரம் ஆவேசமானார்.