பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 103

“எல்லாம் உன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு தான் தம்பீ! வீட்டிலே சம்சாரம் நல்லா இருக்கா? வீடு எங்கே?. எஸ்டேட் லைன்லேதானே?”

“ஆமாம். அங்ஙனேதான் ஒரு புறாக்கூடு விட்டி ருக்காங்க. வாங்க வீட்டுக்குப் போயி ஒரு டீ குடிக்கலாம்.”

“வேண்டாம் தம்பீ! உங்க புது முதலாளி அரசியல்ே நமக்கு ஆகாதவரு. லைன்லே மத்தவங்க காணறாப்பலே நான் உன் வீட்டுக்கு வந்தா ஒருவேளை அது உனக்குக் கெடுதலா முடியும்.”

“ஒரு கெடுதலுமில்லே. நீங்க சும்மா வாங்க அண்ணாச்சி! லைன்லே இப்போ ஈ காக்கா இருக்காது. எல்லாம் குளுருக்கு அடக்கமாகக் கம்பளிலே பூந்துக்கிட்டு உள்ளே முடங்கியிருக்கும்.”

அவன் வற்புறுத்தவே உடன் வந்திருந்த மணவாளன் முதலிய மாணவர்களை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு அவனோடு அண்ணாச்சி எஸ்டேட் லைனுக்குப் போனார். போகும்போதே அவனிடம் காதும் காதும் வைத்தாற்போல் தாம் வந்த காரியத்தைச் சொல்லி மெல்ல விசாரிக்கத் தொடங்கிவிட்டார் அவர்.

“உங்ககூட இருந்த ஸ்டுடன்ஸைப் பார்த்ததுமே நீங்க இதுக்காவத்தான் வந்திருக்கணும்னு புரிஞ்சுக்கிட்டேன். நீங்க தேடி வந்த ஆள் இங்கேதான் இருக்குது. ஆபத்து எதுவுமில்லே. இன்னிக்குக் காலையிலே மட்டும் கொஞ்சம் சித்திரவதை பண்றாப்பல சிரமப்படுத்தி அந்தப் பையன் கிட்ட ஒரு லெட்டர் எழுதி வாங்கினாங்க. அப்புறம் ஒண்ணுமில்லே. இப்ப நீங்க என்னைப் பார்த்தீங்களே, அந்தத் தகரக் கொட்டகையிலேதான் அடைச்சுப் போட்டி ருக்காங்க...” என்று விசுவாசம் காரணமாக எதையும் ஒளிக்காமல் உள்ளபடி அண்ணாச்சியிடம் சொல்லிவிட் டான் மருதமுத்து.

பேசிக்கொண்டே எஸ்டேட் லைனில் அவன் வீட்ட ருகே வந்திருந்தார்கள் அவர்கள். மருதமுத்து சொன்னது