பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 115

காரியத்தைச் செய்யத் தயங்கி நிற்பதற்குள் நாணமே இல்லாத காரணத்தால் தீயவர்கள் அதற்கு எதிரான பத்துத் தீமைகளைச் செய்தே முடித்து விடுகிறார்கள். நல்லவர்கள் நாகரிகம் காரணமாக அஞ்சித் தயங்கி நின்றால் தீயவர்கள் அந்த நாகரிகத்தையே ஒரு கோழைத் தனமாகக்கருதி மேலும் மேலும் அச்சுறுத்துகிறார்கள். அதனால்தான் நாணமும் அச்சமும் மடநாய்களுக்கு அன்றோ வேண்டும்’ என்று நம் தலைமுறைக் கவியாகிய பாரதியார் கூடப் பாடியிருக்கிறார். பிளாக் மெயில் பண்ணுவதுபோல் இப்படிக் காரியங்களைச் செய்வதே அன்பரசன் குழுவினரின் வழக்கம். நாம் இதை ஒரு பொருட்டாக நினைத்துத் தயங்குவதுகூட அநாவசியம்.”

“இந்தத் துண்டுப் பிரசுரம் ஒருபுறம் இருக்க இவர் தேர்தலிலிருந்து வித்ட்ரா பண்ணிக் கொண்டு விலகி விட்டதாக முதலிலேயே ஒரு வதந்தியைக் கிளப்பினார்கள். மறுபடியும் நேற்று இரவிலிருந்து மீண்டும் அப்படி ஒரு வதந்தி பேசப்படுகிறது. இவர் வேண்டாம் என்று கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டதால் வெற்றிச் செல்வனே போட்டி யின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்து விடுவார்கள் என்று பேசிக்கொள்கிறார்களே?”. என்பதாக வினவிய கண்ணுக்கினியாளுக்கு அண்ணாச்சி மறுமொழி கூறினார்: “அதெல்லாம் எதுவும் நடக்கப் போறதில்லே தங்கச்சி! நாம்தான் ஜெயிக்கப் போறோம். தங்களுக்கு வரப்போற தோல்வியைக் கற்பனை கூடப் பண்ண முடியாமே அதை மறக்கறத்துக்காக இப்பிடி ஏதேதோ கதை கட்டி விடறாங்க தம்பியைப் பார்த்த மகிழ்ச்சியோட நீ நிம்மதியா ஹாஸ்டலுக்குப் போய்ச் சேரு தங்கச்சி. இந்த மாதிரி நோட்டீஸை எல்லாம் கிழிச்சுக் குப்பைக் கூடையிலே எறிஞ்சு காறித் துப்பிட்டுப் போகணும். இதுக்கு மரியாதை அவ்வளவுதான்.”

காலைக் காப்பி சிற்றுண்டிக்குப் பின் மணவாளன், கண்ணுக்கினியாள், மோகன்தாஸ், பொன்னையா, முதலிய