பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சத்திய வெள்ளம்

வும் ஆயிற்று என்பதுபோல் எதிரே இருப்பவர்களை எச் சரிக்கும் துணிவு சிறிதுகூட இல்லாமல், ஏதோ தாமோ, தம் மாணவர்களோ செய்துவிட்ட ஒரு குற்றத்துக்காக இரங்குவது போன்ற தொனியில் துணைவேந்தர் பேசியது பூதலிங்கத்துக்கு ஆச்சரியமாக இருந்தது.

“நாங்கள் வேற்றான் வீட்டு விவேகத்தையும் மதிப் பவர்கள். தோற்றோர் பக்கத்துத் துணிவையும் வியப்பவர் கள். எங்களை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடா துங்க..” என்று திடீரென்று சம்பந்தமோ, அர்த்தமோ இன்றிப் பூதலிங்கத்தின் பக்கம் திரும்பிக் குழைவாக ஆரம் பித்தார் இராவணசாமி. இந்த வஞ்சப் புகழ்ச்சியின் பொரு ளென்ன என்பது முதலில் பூதலிங்கத்துக்குப் புரியவில்லை. போகப் போகப்புரிந்தது. தாம் மைதானத்துக்கு வந்து மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்காமல் பூதலிங்கத்தை யும் அவரோடு டிரைவர்களையும் அனுப்பியே லாரிகளைத் திருப்பிக் கொண்டுபோக விரும்பினார் இராவணசாமி.

“பாவம்! ரொம்பச் சிரமப்படுகிறார். ‘ஹெல்ப் பண்ணுங்களேன் மிஸ்டர் பூதலிங்கம்!” என்று தாயுமான வனாரும் அதற்கு ஒத்துப் பாடினார். பூதலிங்கத்துக்குக் கோபம் வந்து விட்டது. அவர் தமக்கு இருபுறமும் அமர்ந்தி ருந்தவர்களிடம் எதுவும் பேசாமல், துணை வேந்தரைப் பார்த்து மட்டுமே பதில் சொன்னார். -

“நீங்கள் கூப்பிட்டனுப்பியதற்காகத்தான் நான் வந்தேன் சார்! இதில் ஹெல்ப் என்ற பேச்சுக்கே இடமில்லை. மாணவர்கள் சொல்லியதை உங்களிடம் வந்து சொல்லி விட்டேன். நீங்கள் ஏதாவது சொன்னால் அதை மாணவர் ‘களிடம் போய்ச் சொல்லுகிறேன். அவ்வளவுதான் நான் செய்யலாம். ஆனால் மாணவர்களிடம் அவர்கள் கோரிக்கையை விட்டுக் கொடுக்கச் சொல்லிச் சிபாரிசு செய்ய மட்டும் நான் ஆளில்லை.”

“கொஞ்சம் தயவு பண்ணுங்க சார்” என்று மறுபடியும் இராவணசாமி பேசத் தொடங்கியதும், “இதோ.பாருங்கள், மிஸ்டர் இராவணசாமி! தயவுசெய்து நீங்கள் எதைச் சொல்ல