பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 - சத்திய வெள்ளம்

வசூலாகி நிரம்பியிருந்தன. கூட்டம் கலைந்த பின்னும் அதை எண்ணி முடிக்க வெகுநேரம் ஆயிற்று. பெரும் பாலான மாணவர்கள் பல்கலைக் கழக விடுதிகளுக்குத் திரும்பிவிட்டாலும் நூறு மாணவர்கள் எண்ணுகிறவர் களுக்குக் காவலாக மேடையைச் சூழ்ந்து கொண்டு இரவையும் குளிரையும் பொருட்படுத்தாமல் நின்றார்கள். இரவு பதினொன்றேகால் மணிக்கு மொத்த வசூல் “ரூபாய் ஆறாயிரத்து எண்ணுற்று ஐம்பத்திரண்டு என்று பாண்டியன் மணவாளனிடம் கணக்குச் சொன்னான். அப்போதுதான் அண்ணாச்சியும் அடிபட்ட கடைப் பையன்களைப் பார்த்துவிட்டு ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பினார். மாணவர்கள் சார்பில் அந்தத் தொகையை மணவாளன் அண்ணாச்சியிடம் கொடுத்தபோது முதலில் அவர் அதை ஏற்க மறுத்தார். அப்புறம் மாணவர்களும், மணவாளனும் வற்புறுத்தி அவர் அதை ஏற்கும்படி செய்தனர். மறுநாள் காலையிலேயே கடையைப் புதுப் பிக்கும் ஏற்பாடுகளில் முனைந்தார் அவர். . வெற்றி விழாவுக்கு அடுத்த நாள் காலையிலேயே துணைவேந்தர் அவசர அவசரமாக ஒரியண்டேஷன் நாளைத் தொடங்கி வைத்துப் பேசினார். அன்று மாலை தான் மணவாளனும் மல்லிகைப் பந்தலிலிருந்து ஊர் திரும்பினார். காலையில் துணைவேந்தரின் ஒரியண்டேஷன் நாள் சொற்பொழிவு முடிந்ததுமே பாண்டியன் முதலிய நூற்றுக்கணக்கான மாணவர்கள் மணவாளனை வழியனுப்பி விடை கொடுக்கக் கூடி விட்டனர்.

மணவாளன் ஊர் திரும்பியதற்கு அடுத்த நாள் காலையிலிருந்து தேர்தல் புயல்களும் போட்டிகளும் மறைந்து, மறந்து தத்தம் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள் மாணவர்கள். மணவாளனே போகும் போது இனிமேல் படிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத் துங்கள் என்றுதான் அறிவுரை கூறிவிட்டுப் போயிருந்தார். நாட்கள் விரைந்தன. செப்டம்பரில் பாரதி விழா வந்து போயிற்று. பல்கலைக் கழக நாடகப் பிரிவு மாணவ