பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 சத்திய வெள்ளம்

கொடுத்து வைத்திருந்தான் அவன். அந்தக் கடிதம் மோகன் தாஸ்-க்கும், அதை அவனிடம் கொடுத்த பக்கத்து அறை மாணவிக்கும், பாண்டியனுக்கும், அண்ணாச்சிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது. தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர் நிலக்கோட்டை என்ற ஊரில் இருந்தார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினராயிருந்து பின்பு கிறிஸ்தவ சமயத்துக்கு மாறியவர்கள். தந்தை தாய் இருவருமே பஞ்சாயத்து யூனியன் நடுத்தரப்பள்ளி ஒன்றிலே செகண்டரி கிரேடு ஆசிரியர்களாக இருந்தனர். அக்டோபர் மூன்றாம் தேதி காலை அவர்கள் இருவருமே மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்ததாகவும், குய்யோ, முய்யோ என்று கதறி அழுது விட்டுப் போனதாகவும் தெரிய வந்தது. ஆனால் அந்தப் பெற்றோர்கள் பிறரையோ, பிறர் அந்தப் பெற்றோர் களையோ சந்திக்க முடியாமல் போலீஸ், ஆர்.டி.ஒ., துணைவேந்தர் எல்லாருமே கெடுபிடி பண்ணி எல்லா வற்றையும் மறைத்திருந்தார்கள். மேரி தங்கத்துக்குத் துக்கத் தில் நடக்கும் வியாதி உண்டு என்றும் தூக்கத்தில் நடக்கும் பழக்கத்தால் அவள் தண்ணிரில் தவறி விழுந்து இறந்தாள் என்றும் அவள் பெற்றோரே ஒப்புக் கொண்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டதாகவும், “விசாரணை எதுவும் தேவையில்லை” என்றும் அவர்களே ஒப்புக் கொண்டு விட்டதாகவும், செய்திகள் பரவிக் கொண்டிருந்தன. மல்லிகைப்பந்தல் நகரே அந்தச் சம்பவத்தால் பரபரப் படைந்த வதந்திகள் மயமாக மாறியிருந்தது. எங்கும் இதே பேச்சாக இருந்தார்கள் மக்கள். நகரில் பீதியும் பதற்றமுமாக ஒர் இயல்பற்ற சூழ்நிலை நிலவியது.

ஏற்கெனவே திட்டமிட்டபடி மாணவர்களில் ஆறு பேரும் மாணவிகளில் ஆறு பேரும் பல்கலைக்கழக வாயி லில் கால வரையறையின் றி உண்ணாவிரதத்தைத் தொடங்கிவிட்டார்கள்.

உண்ணாவிரதம் தொடங்கிய அதே சமயத்தில் மாணவர்களின் குழு ஒன்று மேரி தங்கத்தின் பெற்றோ