பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 சத்திய வெள்ளம்

தங்கள் படிப்பிலே மலையாக உயர்ந்தவங்கன்னா, இந்தப் பத்திருபது பேரும் அரசியல் சிபார்சிலே வேலைக்கு வந்த வங்களா இருப்பாங்க. இவங்களுக்குத் தொழில் திறமை குறைவாகவும், கட்சி அதிகாரச் செல்வாக்கினாலே ஒரு மிருக பலம் அதிகமாகவும் வந்திடுது. இதுதான் நிலைமை” என்றார் அண்ணாச்சி.

நல்ல வேளையாக மதுரையிலிருந்து நாயுடு வந்த தினத்தன்று காலை மழை இல்லை. கண்ணுக்கினியாள் முதலிய மாணவிகள் அறுவரும் விடுதலையாகி இருந்தனர். கண்ணுக்கினியாள் மல்லிகைப் பந்தல் நகரிலேயே ஒரு கல்லூரித் தோழியோடு அவள் வீட்டில் தங்கியிருந்தாள். நாயுடு வந்திருக்கும் செய்தியைக் கடைப் பையன் ஒருவன் மூலம் கண்ணுக்கினியாளுக்கு அண்ணாச்சி சொல்லி அனுப்பினார். கண்ணுக்கினியாள் பத்தே நிமிஷங்களில் வந்து சேர்ந்தாள். தன் கடையிலிருந்து அண்ணாச்சி அவ ளைத் தேடி அனுப்பிய பையனைப் பின்னால் நடந்து வரச்சொல்லிவிட்டு அவன் வந்த சைக்கிளில் தானே ஏறிக் கொண்டு நாயினாவைப் பார்க்க விரைந்து வந்திருந்தாள் அவள்.

“அடடே! நீயே சைக்கிளில் ஏறிக்கிட்டு அவனை நடந்து வரச்சொல்லிட்டியா தங்கச்சி...? தங்கச்சிக்கு சைக்கிள் விடத் தெரியும்கிறதையே இன்னிக்குத்தான் பார்க்கிறேன் நான்.” என்று அவளை வரவேற்றார் அண் ணாச்சி. அவள் பதில் கூறினாள்: “இந்த ஊர்லே காலார நடக்கிறதைப் போல சுகமான காரியம் வேறே எதுவும் இல்லே அண்ணாச்சி! நாயினாவை உடனே பார்க்கனும் கிற அவசரத்துக்காக இன்னிக்குச் சைக்கிளிலே வந்தேன். எனக்குச் சைக்கிள் நல்லா விடத் தெரியும். ஸ்கூட்டர் கூடப் பழகியிருக்கேன்-இங்கே வந்தப்புறம் அதுக்கெல் லாம் வாய்ப்பில்லே...” என்று அண்ணாச்சியிடம் கூறி விட்டுத் தன் தந்தையின் பக்கம் திரும்பி, “வாங்க நாயினா” என்றாள் அவள்.