பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 223

கடமைகளும் காத்திருக்கின்றன” என்று அவள் காதருகே சொன்னாள் சிவகாமி, தோழி கூறியதைக் கேட்டதும் தன் செயலால் தானே கூச்சப்பட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டு தன் உணர்வுகளைக் கட்டுப்படச் செய்தவளாய் அவர்களோடு நிமிர்ந்து நடந்தாள் கண்ணுக்கினியாள். சாலைகளில் உள்ளூர் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக எதிர்ப்பட்டார்கள். இவர்கள் மூவரும் அப்படி எதிர்ப் பட்டவர்களிடம் எல்லாம் நின்று பேசி எல்லா விவரங்களை யும் தெரிவித்துக் கொண்டு போனார்கள்.

பதினெட்டாம் அத்தியாயம்

கிண்ணுக்கினியாள் வந்து சந்தித்துப் பேசிவிட்டுப் போன பின் அவள் கொடுத்துவிட்டுச் சென்ற அந்தக் கடிதத்தை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தான் பாண்டி யன். மாணவர் பேரவைத் தேர்தலுக்காக அலைந்து கொண்டிருந்தபோது, இந்தப் பேரவைத் தேர்தல் முடிகிற வரை நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தன்னிடம் தனிப்பட்ட அக்கறையோடும் கவலையோடும் அவள் வேண்டிக் கொண்ட தினத்தன்று அந்த வேண்டு தலாலும், அவளாலும் அவன் மனத்தில் என்ன கர்வம் ஏற்பட்டதோ அதே கர்வம் இன்றும் ஏற்பட்டது. புன்ன கையும் நாணமும் இங்கிதப் பேச்சுக்களுமாக எங்கெல் லாம் ஒர் அந்நியமான இளம் பெண் உன்னோடு நடந்து வருகிறாளோ அங்கெல்லாம் உனது உடனடியான சொர்க் கங்கள் படைக்கப்படுகின்றன - என்ற அந்தப் பழைய வாக்கியத்தையும் இப்போது நினைவு கூர்ந்தான் அவன். முன்னைப்போல் இப்போது அவள் அவனுக்கு அந்நிய மில்லை. ஆனால் எவ்வளவு நெருக்கமாயிருந்தாலும் கூடத் தன்னை நினைத்துத் தவிக்க விடுகிற வேளையில் ஒவ்வொரு பெண்ணும் ஓர் ஆணுக்கு மிகவும் அந்நியமாகி

விடுகிறாள் என்றே தோன்றியது.