பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 சத்திய வெள்ளம்

போராட்டங்களிலும், மாணவர் இயக்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திய முதற்பெருமை அவளுடையது என்பது அவன் அந்தரங்கம் அறிந்த செய்தி. அந்தப் பல் கலைக் கழகத்தில் படிக்கும் பெண்கள் அனைவரிலுமே பேரழகியும், வசீகரமானவளும் ஆகிய அவள் மட்டும் அன்று தான் தேர்தல் மனுவில் கையெழுத்திடத் தயங்கிய வேளையில் வளைகளைக் கழற்றி வீசித் தன்னுடைய ரோஷத்தைக் கிளரச் செய்திருக்கவில்லையானால் இதில் தான் துணிந்திருக்க முடியாது என்பதை அவன் உள்மனம் நன்கு உணர்ந்திருந்தது. அவள் மேல் நன்றியும் காதலும் ஒன்றோடொன்று போட்டி போடுகிற அளவு அவன் மனநிலை நெகிழ்ந்திருந்தது அப்போது. சிறைவாசல், பல்கலைக் கழக நிர்வாகமும், அதிகாரிகளும் சதி செய்து சுமத்தியுள்ள பயங்கரக் குற்றச்சாட்டுக்கள் எல்லாமே தூசுக்குச் சமமாகத் தோன்றும் துணிவை அவள் கடைக் கண் பார்வை அவனுக்கு அளித்திருந்தது. காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே காற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடுவோம்’ என்று மகாகவி பாரதியார் பாடியிருந்தது சற்று மிகையான வர்ணனையோ என்று தான் முன்பெல்லாம் அவன் நினைத்திருந்தான். இப்போது அந்த நினைப்பு மெல்ல மெல்ல அவன் மனத்துக்குள் மாறிக் கொண்டு வந்தது. ஒரு விஷயம் மிகையா, உண்மையா என்று கண்டுணரும் அனுபவம் வாழ்வில் எதிர்ப்படாத வரையில் அதை மிகை என்றோ, உண்மை என்றோ தவறாக முடிவு செய்து விடுகிறோமே தவிர, நம்முடைய முடிவு அதன் நியாயமாகி விடுவ தில்லை. கண்ணுக் கினியாளைச் சந்திக்கிற வரை அடைய முடியாமல் இருந்த ஒரு நளினமான அநுபவத்தை அடைந்த பின் பாரதி யாரின் அந்தக் கருத்திலிருந்த உண்மையை அவன் உணர

முடிந்தது.

. இங்கே சிறையில் அவனுக்கும் மற்ற மாணவர் களுக்கும் ‘பி’ வகுப்புக் கொடுத்திருந்தார்கள் என்றாலும் நடைமுறையில் சி வகுப்பைவிடக் கடிமையாக எல்லாம்