பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 231

“மதுரையிலே இறங்கி எங்க ஊருக்குப் பஸ் மாற நேரமும் கிடைச்சு பஸ் ஸ்டாண்டிலே இருந்து ஊருக் குள்ளே வந்தா கண்டிப்பா வரேன். மணவாளன்’னு எங்க மாணவர் தலைவர் ஒருத்தர் மதுரையிலே இருக்காரு. அவரையும் பார்க்க வேண்டிய வேலை இருக்கு” என்றான் பாண்டியன்.

“நீங்க மணவாளனைப் பார்க்க மட்டும் நேரம் இருக்கும். என்னைப் பார்க்க நேரம் இராது? அப்படித் தானே?” என்று கண்ணுக்கினியாள் செல்லமாகக் கோபித் துக் கொள்ளத் தொடங்கினாள். பாண்டியன் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தான். அப்புறம் சொன்னான்:

“நீயா ஏன் நான் வரமாட்டேன்னு கற்பனை பண்ணிக் கணும்? நான் அப்படிச் சொல்லலியே? வேணும்னா மணவாளனையும் கூட அழைத்துக் கொண்டு உங்க வீட்டுக்கு வருகிறேனே?. போதுமா?”

மதுரைக்காக பஸ்ஸுக்குப் புறப்படுவதற்குள் நாயினா தனியே மகளை எங்கும் போகவிடமாட்டார் போலி ருந்தது. பாண்டியன் அவளையும், அவள் பாண்டியனை யும் தனியே கண்டு பேசத் தவிப்பது அண்ணாச்சிக்குப் புரிந்தது. ஊருக்குப் புறப்பட்ட பஸ்ஸுக்கு இன்னும் நான்கு மணி நேரத்துக்கு மேல் இருந்தது. இந்த நிலையில் கண் ணுக்கினியாளுக்கும், பாண்டியனுக்கும் அண்ணாச்சி ஒரு பெரிய உதவியைச் செய்தார். நாயினாவுக்கு ஆஞ்சநேயர் பக்தி அதிகம் என்பது அண்ணாச்சிக்குத் தெரியும். அந்த நாளில் எந்த ஊரில் நாடகத்துக்குப் போனாலும் அந்த ஊரிலிருந்து ஆறு மைல் தள்ளி அனுமார் கோயில் ஒன்று இருந்தாலும் தேடிப் போய்க் கும்பிட்டுவிட்டு வருவார் கந்தசாமி நாயுடு.

“நாயினா! பக்கத்தில் யுனிவர்ஸிடி வடக்கு வாசலுக் குச் சமீபமா ஒரு அனுமார் கோயில் இருக்கு. இன்னிக் காவது மலைகிலை சரியாமப் பிரயாணம் சுகமாயி ருக்கணும்னு போய் வேண்டிக்கிட்டு வரலாம் வாங்க.."