பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 239

அவர்கள். துணைவேந்தருக்கு அந்த இருவரையும் பார்க்கும் போதே நடுக்கமாக இருந்தது. அவர்கள் தாம் எதிர் பார்க்கிறபடி இசையமாட்டார்கள் என்பது அவருக்குப் புரிந்தது.

துணைப் பதிவாளர், கூட்டத்துக்கான அஜெண்டா டைப் செய்த பிரதிகளை ஒவ்வொருவர் முன்னும் வைத்தார். விஷயங்கள் எதுவும் வெளியே பரவி விடக்கூடாது என்ப தற்காக மினிஸ்ட்ஸு'க்குக் குறிப்பு எடுக்கும் ஸ்டெனோ தவிர வேறு அலுவலக ஆட்கள் யாரும் அங்கே அனு மதிக்கப்படவில்லை. கூட்டத் தொடக்கத்தில் துணை வேந்தர் எழுந்து பேசும்போது, பல்கலைக் கழக வளர்ச் சிக்கு அப்போது பதவியிலுள்ள அரசு முந்திய அரசு களைவிட என்னென்ன உதவியிருக்கிறது என்பதையும், பல்கலைக் கழகத்தில் பல புதிய கட்டிடங்கள் கட்டு வதற்கும் மற்றவற்றுக்கும் வணக்கத்துக்குரிய அந்த அமைச் சர் என்னென்ன உதவிகள் செய்துள்ளார் என்பது பற்றியும் பச்சையாகப் புளுகத் தொடங்கினார். அஜெண்டாவில் முதலில் இருந்த விஷயமோ காலியாயிருந்த இரண்டு ரீடர் பதவிக்குத் தகுந்தவர்களை நியமிப்பது பற்றியது. அதைப் பற்றிக் குறிப்பிடவே மறந்து துணைவேந்தர் மந்திரியின் துதிபாடத் தொடங்கியதால் டாக்டர் ஹரிகோபால் ஆத்திரம் அடைந்தார்.

“மிஸ்டர் வி.சி.! ஆன் ஏ பாயிண்ட் ஆஃப் ஆர்டர் ஐ விஷ் டு ஸே, யூ ஆர் கோயிங் அவுட் ஆஃப் தி அஜெண்டா ஆன் தி டேபிள் ஹியர்” - டாக்டர் ஹரிகோபால் இரைந்ததும் மற்ற உறுப்பினர்கள் நாலைந்து பேர் அவரை உறுத்துப் பார்த்தார்கள். ஹரிகோபால் அதற்கு அஞ்ச வில்லை. மிஸஸ் செரியனும் அவரை ஆதரித்தாள். துணை வேந்தர் வழிக்கு வந்தார். ரீடர் நியமனம் பற்றிய விவரங் களை எடுத்து வாசித்தார். அதிலும் வழக்கம்போல் மழுப்பல்கள் இருந்தன. -

செர்வீஸ், தகுதி, திறமை எல்லாம் இருந்த இரண்டு பேர்களைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு அவை எல்லா