பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 253

நாயுடு உள்ளே நுழைந்தார். பாண்டியனைப் பார்த்ததும், “அடடே, வா, தம்பி! எப்ாேபது வந்தே” என்று வரவேற்று விட்டு, “என்ன, வந்ததும் வராததுமா தம்பிகிட்டே அருண கிரிநாதரு தலையை உருட்டlங்க?” என்று மனைவியை யும் மகளையும் பார்த்துக் கேட்டார் நாயுடு. பேசிக் கொண்டே சிற்றுண்டியை முடித்திருந்த பாண்டியனுக்குக் காப்பி கொண்டு வந்து கொடுப்பதற்காக உள்ளே சென்ற கண்ணுக்கிணியாள் திரும்பி, “நாயினா! உங்களுக்குக் காப்பி கொண்டாரட்டுமா?” என்று தந்தையைக் கேட்டாள். கொண்டு வா என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்து விட்டுப் பாண்டியனுக்கு அருமே மற்றொரு நாற்காலியில் அமர்ந்தார் நாயுடு.

“என்ன தம்பி, உங்க யூனிவர்ஸிடியிலே மந்திரி கரிய மாணிக்கத்துக்கு டாக்டர் பட்டமில்லை தர்ராங்களாம்? இதென்னப்பா கயவாளித்தனம்? எனக்குத் தெரிஞ்சு உ.வே. சாமிநாத ஐயருக்குத்தான் அந்த நாளிலே மொத மொதலா இப்பிடி ஒரு ஹானரரி டிகிரியைக் கொடுத் தாங்க. அவுரு பட்டிதொட்டி எல்லாம் அலைஞ்சு கார் போகாத ஊரு, ரயில் போகாத ஊருக்கெல்லாம் கட்டை வண்டியிலும், நடந்தும் போயி ஏட்டையும், சுவடியையும் தேடிக் கொண்டாந்து இப்படி இவனுக வால்க போடற தமிழை எல்லாம் அச்சுப் போட்டுக் கொடுத்தாரு பதிப் பிச்சாரு ஐயமாருலே வேற யாரும் தமிழுக்கு இவ்வளவு பாடுபடலே. முக்கால்வாசி ஐயமாருங்க டாக்டரு வக்கீல், சர்க்கார் உத்தியோகம்னு, போய்க்கிட்டிருந்த காலத்திலே அவரு தமிழைக் கட்டிக்கிட்டு உசிரை விட்டாரு. அது ரொம்ப ரொம்பப் பெரிய காரியம். அப்பிடி இந்த மந்திரி பெரிசா என்ன செய்துபிட்டாரு தமிழுக்கு இவருக்கு எதுக்கு டாக்டரு?”

‘இப்போதெல்லாம் சாதனைகளுக்காகக் கெளரவங்கள் வழங்கப்படுவதில்லை. கெளரவங்களை வழங்குவதும் பெறுவதுமே சாதனைகளாகக் கருதப்பட்டுப் பெரிய மனிதர்கள் அவற்றுக்காகத் தவித்துப் பறக்கிற காலம் இது."