பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 275

“நீங்க சொல்றதை அப்படியே ஒப்புக்கொண்டுவிட முடியாது! தங்களுக்கு வயதாகி மூப்பு வந்து விட்டாலும் நாட்டையும், நாட்டின் எதிர்காலத்தையும் நினைத்துக் கவலைப்படுகிற தங்களது பொறுப்புணர்ச்சியை இன்னும் இளமையாகவே வைத்துக் கொண்டிருக்கிற பெரியவர்கள் சிலரும் நம்மிடையே இருக்கிறார்கள். தாங்கள் இளமை யாகவே இருந்தாலும் நாட்டைப் பற்றிக் கவலையே ல்லாமல் வெறும்ஃபாஷன்களின் காட்சிப் பொம்மைகள் பால் திரியும் இளைஞர்களும் இருக்கிறார்கள். டிஸ்கொதே’ ரெஸ்டாரண்டுகளின் பொய் இருளைத் தேடி அலையும் பல இந்திய இளைஞர்களை எனக்குத் தெரியும், மூத்துத் தளர்ந்த பின்னும் இளமையாகச் சிந்திக்கும் சில வயதானவர் களும், இளமையாக இருக்கிறபோதே மூத்துத் தளர்ந்து விட்டாற்போல் கிழட்டுத்தனமாகச் சிந்திக்கும் இளைஞர் கள் சிலருமாக இங்கே கலந்திருக்கிறார்கள். இந்தக் கலப்பை நீங்கள் அருப்புக்கோட்டையிலோ, பாலவநத்தத்திலோ இருந்து புரிந்து கொள்ள முடியாது. இன்னும் பரபரப்பான நகரங்களில் வந்து பார்த்தால்தான் இது புரியும்.”

அவன் எவ்வளவோ மறுத்தும் கேளாமல் இலக்கிய மன்றத்துக்குப் பேச வருமாறு வற்புறுத்தினார் அந்தத் தலைமை ஆசிரியர். அவனும் போய்ப் பேசிவிட்டு வந் தான். அன்றைய தினம் அவன் செய்த சொற்பொழிவை எல்லாருமே பாராட்டினார்கள். அவன் கிராமத்துக்கு வந்திருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டாடுவது போல் அவன் தாய் இன்று கேழ்வரகு அடை, நாளை காராச் சேவு, நாளன்றைக்கு முறுக்கு என்று வாய்க்கு ருசியாக அவனுக்குச் செய்து கொடுத்து உபசரித்துக் கொண்டிருந் தாள். அவன் வந்து சேர்ந்த முதல் நாளுக்குப் பின் அவன் தாயும், தங்கையும் வயல்காட்டு வேலைகளுக்குப் போவதை நிறுத்திவிட்டார்கள். தந்தை தாம் எப்போதும் போல் காலையில் போய் சூரியன் மலை வாயில் விழுகிற நேரத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். நடுவில் ஒரு நாள் இரவு அவனோடு பேச நேரம் வாய்த்தபோது கிழக்கு