பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 277

படிப்பது அவன் பழக்கமில்லை; அந்தக் கிணற்றடிதான் படிப்பதற்கு எப்போதுமே அவன் தேர்ந்தெடுக்கும் இடம். படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையும் அமைதியுமுள்ள இடமாக அந்தக் கிணற்றடி அவனுக்குப் பழக்கமாகியிருந்தது.

“வருங்காலக் காதலர்களுக்கு என்ற அந்தக் கவிதைத் தொகுதியில் எல்லாமே காதல் கவிதைகளாக இருக்கும் என்று அவன் நினைத்திருந்தான். ஆனால் அப்படி இல்லை. “வருங்காலத்தைக் காதலிப்பவர்களுக்கு - என்ற அர்த்த மும் தொனிக்கும்படி அந்தத் தலைப்பைச் சூட்டியிருப்ப தாக நவநீத கவியே தமது முன்னுரையில் எழுதியிருந் தார். தொகுதியில் சேர்ந்திருந்த இளம் நம்பிக்கைகள் என்ற கவிதை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

“இந்த நூற்றாண்டின் இந்திய இளைஞனே! இப்போது நீ எந்த இடத்தில் நிற்கிறாய்? ஆன்மீகத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் நடுவிலா? அறியாமைக்கும் அறிவுக்கும் நடுவிலா? நேற்றைய அவநம்பிக்கைகளுக்கும் இன்றைய சிரமங்களுக்கும் நடுவிலா? நீ நிற்கும் இடம் உனக்குப் புரிகிறதா? அவநம்பிக்கைகள்தான் உன் முன்னோர் உனக்கு அளித்த பிதுரார்ஜிதங்களா? சிரமங்கள்தான் நீ உனக்கென்றே தேடிக்கொண்ட புதுச் சொத்துக்களா? நீ நிற்கும் இடம் உனக்குப் புரிகிறதா? சாலை விதிகளைச் சரியாகப் புரிந்துகொள். சாலைகளின் நடுவே நிற்கக்கூடாது நடுவே நிற்பவர்கள் எப்போதுமே விபத்துக்குள்ளாகிறார்கள் நடுவில் நிற்காதே; பின்னாலும் போகாதே முன்னேறிவிடு! முன்னால் வழிகள் தெளிவாயுள்ளன நடுவில் நிற்காதே பின்னாலும் போகாதே நீ நிற்குமிடம் உனக்குப் புரிகிறதா நடுவில் நிற்பவர்கள் எப்போதுமே விபத்துக்குள்ளாகிறார்கள் முன்னேறி விடு! முன்னால் வழிகள் தெளிவாயுள்ளன."