பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 சத்திய வெள்ளம்

அம்மா! போகிற இடங்களில் எங்கே எத்தனை மணிக்கு நாங்கள் சாப்பிட நேரிடும் என்பதைச் சொல்ல முடியாது. நீ வேறு எங்களுக்காக இங்கே சாப்பாட்டை வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டாம்” என்று மணவாளன் மறுத்துவிட்டார்.

“காலையில் முதல் பஸ்ஸில் புறப்பட்டு நான் மல்லி கைப் பந்தலுக்குப் போய் விடுவேன். நீ நாளன்றைக்குப் புறப்பட்டு வருகிறாயாக்கும்?” என்று அவளிடம் விசாரிப் புது போல் தனக்கு ஏற்கெனவே தெரிந்ததையே மறுபடியும் கேட்டுவிட்டு அவளிடம் விடைபெற்றான் பாண்டியன்.

“நாயினா வந்தா விசாரிப்பாங்க. மறுபடியும் வந்து அவரைப் பார்த்துச் சொல்லிட்டுப் போங்களேன்” என்றாள் அவள். பாண்டியன் சிரித்தான். தன்னை அவள் மறுபடியும் அங்கே வரவழைக்க முயல்வது அவனுக்குப் புரிந்தது.

முதலில் நகரை விட்டுச் சற்றே ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு கல்லூரி விடுதிக்குச் சென்றார்கள் அவர்கள். விடுதியின் மாணவர்களைச் சந்தித்துப் பேசியபோது அந்த மாணவர்கள் மணவாளனிடமும் பாண்டியனிடமும் ஒரு குறையை முறையிட்டார்கள். அந்தக் கல்லூரியில் குறுகிய நோக்கமுள்ள ஒரு பேராசிரியர் வகுப்புக்கு வராமல் பாடத்தை விட்டுவிட்டுத் தமிழ்நாடு தனியே பிரிய வேண்டும்’ என்று பிரசாரம் செய்வதாகவும் அவரே கல்லூரித் தமிழ் மன்ற விழாக்களிலோ, பேரவைக் கூட்டங் களிலோ முடிவில் தேசிய கீதம் பாடப்படுவதைத் தடுக் கிறார் என்பதாகவும் ஒருமுறை மாணவர் விழாவில் அந்தப் பேராசிரியரே ஆத்திரமாக எழுந்து ஒடி வந்து, ஒலி பெருக்கிக்காரன் கையிலிருந்த தேசிய கீத ரிக்கார்டை” வலியப் பிடுங்கி உடைத்து விட்டதாகவும் மாணவர்கள் வருத்தப்பட்டார்கள். இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே மணவாளனுக்குத் தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது.

“தெய்வ பக்தி இல்லாதவர்களையாவது நாத்திகர்கள் என்று ஒதுக்கிவிட முடியும் தேசபக்தி இல்லாதவர்களை