பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 293

கதிரேசன் பஸ் நிலையத்திலேயே அந்தப் பிரச்னை யைச் சொல்லத் தொடங்கியதும், இங்கே பேசவேண்டாம். அண்ணாச்சி கடையிலே போய்ப் பேசுவோம்” என்று பாண்டியன் அவர்களையும் உடனழைத்துக் கொண்டு அண்ணாச்சி கடைக்குப் போனான். அவன் போனபோது கடையில் அண்ணாச்சி இல்லை. எங்கோ வெளியே போயிருந்தார். கடையின் பின் அறையில் போய் அமர்ந்தார்கள் அவர்கள். கதிரேசனும், பிறரும் இடை யிடையே அந்த யாழ்ப்பாணத்துப் பெண்ணும் சொல்லிய திலிருந்து பாண்டியனுக்கு என்ன நடந்திருக்க வேண்டும் என்று புரிந்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஒரு மாலை வேளையில் மல்லிகைப் பந்தல் ஏரியின் கரையில் பூங்காவில் இருந்த பெஞ்சு ஒன்றில் அந்தப் பெண் பாலேஸ்வரி அமர்ந்திருந்தபோது மல்லை இராவணசாமி யின் மூத்த மகனும் கோட்டச் செயலாளர் குருசாமியின் மூத்த மகனும் அந்தப் பக்கமாக வந்து அவளை வம்புக்கு இழுத்துக் கேலி செய்திருக்கிறார்கள். இருவருமே பல்கலைக் கழகத்தில் படிப்பவர்கள்தான், என்றாலும் திமிர் பிடித் தவர்கள். அவர்கள் பாலேஸ்வரியிடம் முறைகேடாக நடந்து கொள்ள முயலவே, அவள் கால் செருப்பைக் கழற்றி அடிக்க ஓங்கிக் கூப்பாடு போட்டுக் கூட்டம் சேர்ந்துவிட்டாள். மல்லை இராவணசாமியின் மகனும், குருசாமியின் மகனும் கூட்டத்தைக் கண்டதும் பயந்து ஒடிவிட்டார்கள். ஆனால் வீட்டில் போய் இருவரும் தங்கள் தங்கள் தந்தையிடம், பார்க்கில் தனியாக அமர்ந்தி ருந்த அவள் தங்களைத் தவறான வழியில் அழைத்ததாக மாற்றிச் சொல்லி அதன் விளைவாக மல்லை இராவண சாமியும், கோட்டம் குருசாமியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒடி இன்ஸ்பெக்டரிடம் வத்தி வைத்துவிட்டார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டரும், உடனே இந்தப் பெண்ணைக் கூப்பிட்டு அவராகப் பொய்க்குற்றம் சாட்டி எழுதிய எஃப்.ஐ.ஆரில் இவளைக் கையெழுத்துப் போடும்படி வற்புறுத்தியிருக்கிறார். இவள் பிடிவாதமாக மறுத்திருக்