பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 சத்திய வெள்ளம்

கிறாள். இவளைப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துப் போனதைப் பார்த்த கெமிஸ்ட்ரி புரொஸர் பூரீராமன் பின் தொடர்ந்து ஸ்டேஷனுக்குப் போய் என்னவென்று விசாரித்திருக்கிறார். ‘விபசாரக் குற்ற வழக்கு என்றவுடன் பூரீராமன் கடுங்கோபங் கொண்டு, “நோ. நோ. யாரோ உங்களுக்குத் தப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். இவள் என் மாணவி. இவளை நான் நன்றாக அறிவேன். இது அபாண்டம். அடுக்காது” என்று கூறியிருக்கிறார். பூரீராமன் நரைத்த தலையும், முடிந்த குடுமியும், பழுப்பேறிய வேஷ்டியுமாக ஒரு பழைய காலத்துத் தோற்றம் உடைய வராக இருக்கவே, போலீஸ் இன்ஸ்பெக்டர், “பஞ்சாங்கக் காரப் பயலே! வெளியிலே போடா! நீ யாரடா இதை வந்து இங்கே சொல்றதுக்கு” என்று திடீரென்று அவர் மேல் பாய்ந்து அவரது கழுத்தின் பின்புறம் பிடரியில் கைகொடுத்து அழுத்தி நெட்டித் தள்ளியிருக்கிறார். இன்ஸ் பெக்டர் தள்ளியதும் தள்ளாடித் தலைகுப்புற விழுந்த பூரீராமன் முன் நெற்றியில் காயத்தோடு அவமானப்பட்டு வீட்டுக்குத் திரும்பி அப்புறம் அது ஊர் முழுவதும் பரவி நானும் முந்நூறு நானுறு மாணவர்களும் ஸ்டேஷனுக்கு ஊர்வலமாகப் போன பிறகுதான் இந்தச் சகோதரியை மீட்க முடிஞ்சுது. ஒரு மாணவியின் மேல் அபாண்டமாக விபசாரக் குற்றச்சாட்டு வருகிறது. அதைக் கேட்கப்போன ஒரு புரொபஸரைப் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். இது நாடா அல்லது. காடான்னுதான் புரியலே. மல்லை இராவணசாமிக்கும், கோட்டச் செயலாளர் குருசாமிக்கும் மட்டும்தானா போலிஸ்? நமக்கெல்லாம் இல்லியா அந்தப் போலீஸ்? இவ் வளவு பெரிய அக்கிரமம் நடந்தும் வி.ஸி. இன்னும் இதைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசலே, பேருக்குக்கூட வருத்தப் படலே போலீஸ், வி.சி., ஆர்.டி.ஓ. எல்லாருமாகச் சேர்ந்து பேப்பர்லே இந்தச் செய்தி வரவிடாமல் பண்ணிப்பிட் டாங்க பாண்டியன்! நான் உனக்கு இதைப்பற்றி ஒரு தந்திகூடக் கொடுக்கலாம்னு நினைச்சேன். ரொம்பக்