பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 295

கொடுமை இது. இதை இப்பிடியே விட்டுவிடக் கூடாது” என்று குமுறினான் கதிரேசன்.

“புரொபஸர் பூரீராமன் இப்ப வீட்டிலே இருக்காரா, ஆஸ்பத்திரியிலே இருக்காரா? அவரை முதல்லே போய்ப் பார்ப்போம். அப்புறம் மற்றவற்றை யோசிக்கலாம்” என்றான் பாண்டியன். கெமிஸ்ட்ரி புரொபஸர் வீட்டில் தான் இருக்கிறார் என்று கதிரேசன் கூறியதும் அவர்கள் உடனே அவரைப் பார்க்கப் புறப்பட்டார்கள். பேராசிரியர் பூரீராமன் பழைய காலத்து மனிதர். ஆனால் நல்ல படிப்பாளி. மாணவர்கள் மேல் கருணையும் அன்பும் உடையவர். அவருக்கு இப்படி ஒரு கொடிய அவமானம் இழைக்கப்பட்டு விட்டது என்பதை இப்போது மறுபடி நினைத்துப் பார்க்கவும்கூட வருத்தமாக இருந்தது பாண்டியனுக்கு.

பூரீராமன் அவர்களைப் பார்த்ததும் அழாத குறையாக எல்லாவற்றையும் விவரித்தார். “நான் பண்ணின பாவம் அப்பா ! ஒரு வெளிநாட்டு மாணவி-நம்ம தேசத்தை நம்பிப் படிக்க வந்தவளைப் பத்தி இப்படி ஒரு அபாண்ட மான்னு கேட்கப் போனேன். இன்ஸ்பெக்டர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. போட்ட தூபத்திலே அவனுக்குக் கட்டுப் பட்டுக் கிடக்கிறார். அந்தச் சமயம் பார்த்து நான் நியாயம் கேட்கப் போய்ச் சேர்ந்தேன். அதுக்குத்தான் இந்தத் தண்டனை, ரெண்டு எம்.எல்.ஏ.யும் பவர்லே இருக்கிற மினிஸ்டிரிக்கு வேண்டியவனும் எது சொன்னாலும் அதைத்தான் கேக்கறதுன்னு வந்துட்டா அப்புறம் போலீஸ் எதுக்கு? நியாயம், சட்டம்லாம் எதுக்கு?” என்று கொதித் துக் கேட்டார் அவர். பாண்டியனுக்கும் உள்ளம் குமுறியது. பாலேஸ்வரி மீண்டும் புரொபலருக்கு முன் கண் கலங்கி அழுதே விட்டாள். உடனடியாக ஒரு கண்டன ஊர் வலத்தை நடத்தி அந்த வெளிநாட்டு மாணவியையும், புரொபலரையும் ஆதரித்ததற்காகக் கதிரேசனைப் பாராட்டினான் பாண்டியன். உடனே பத்திரிகைகளுக்கு அதைப் பற்றிச் செய்திகள் அனுப்ப ஏற்பாடு செய்தான்.