பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சத்திய வெள்ளம்

லாளர் பதவிக்கு மேலும் சிலர் உதிரிகளாக நிற்பார்கள் போலிருக்கிறது.”

“நிற்கட்டும். அதனால் நமக்கு ஒன்றும் கவலை இல்லை. மோகன்தாசும், நானும் ஜெயிக்கப் போவது என்னவோ உறுதி.” என்றான் பாண்டியன்.

“வெற்றிச் செல்வனுக்கும், அன்பரசனுக்கும் அவர்கள் கட்சியின் கோட்டச் செயலாளர் மூலம் பண உதவி செய்யப்படுகிறது. மந்திரிகள் வாழ்த்துச் செய்தி அனுப்பு கிறார்கள். போலீஸ், ஆர்டிஓ, வைஸ்சான்ஸ்லர் எல்லாரும் பயப்படுகிறார்கள்.”

“நன்றாகப் பயப்படட்டும், எந்தக் கோட்டையைப் பிடித்தாலும் இனி இந்தக் கோட்டையை அவர்களால் பிடிக்கவே முடியாது.” .

“எங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது பாண்டியன்! ஆனாலும் நாம் நிறைய வேலை செய்யவேண்டும். நியூ ஹாஸ்டல், ஈஸ்டர்ன் ஹாஸ்டல், மெடிக்கல், என்ஜீனிய ரிங் ஹாஸ்டல்கள், வேளாண்மைக் கல்லூரி விடுதி எல்லாவற்றுக்கும் போய் நாமே மாணவர்களைப் பார்க்க வேண்டும். பெண்கள் ஹாஸ்டலுக்குத்தான் போக முடி யாது. அங்கே நமக்காகப் பிரச்சாரம் செய்யும் வேலையை அண்ணாச்சி, கண்ணுக்கினியாளிடமும் அவள் சிநேகிதி களிடமும் விட்டுவிட்டார். பழைய வழக்கப்படி இருந்தால் நாம் இவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்காது. பாடப் பிரிவுகளின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மட்டுமே வாக்களித்துப் பேரவைத் தலை வனையும், செயலாளனையும், மற்றவர்களையும் தேர்ந் தெடுக்கிற முறையையே சென்ற ஆண்டு வரையில் கடைப் பிடித்தார்கள். இந்த ஆண்டு ஆறாயிரம் விடுதி மாணவர் களுக்கும், ஐந்நூறு மாணவிகளுக்கும் வெளியே நகரிலிருந் தும், சுற்றுப்புற ஊர்களிலிருந்தும் வந்து படிக்கும் ஆயிரத் துக்கு மேற்பட்டி மாணவர்களுக்கும் நேரடியாகவே ‘பாலட் பேப்பர் கொடுத்து தேர்தல் நடத்தப் போகிறார் களாம். அன்பரசன், வெற்றிச் செல்வன் வகையறா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/32&oldid=609551" இலிருந்து மீள்விக்கப்பட்டது