பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 31

ஆட்கள் வி.சி.யைப் பார்த்துப் பிரஷர் கொடுத்து, வி.சி. ரிஜிஸ்டிராரைக் கூப்பிட்டுச் சொல்லி-அதன்பின் இந்தப் புது ஏற்பாடு திடீரென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.”

“இந்த ஏற்பாட்டையே நாம் எதிர்த்துப் போராட முடியும். ஆனால் நாம் இதை எதிர்த்தால் இதை வைத்தே அன்பரசன் குழுவினர் நம்மைப் பற்றி துஷ்பிரச்சாரம் செய்வார்கள். எல்லா மாணவர்களுக்கும் வோட்டளிக்கும் வாய்ப்புக் கிடைப்பதை நாம் எதிர்க்கிறோம் என்று திரித்துப்பிரச்சாரம் செய்வார்கள். அதனால் இதை நாமோ, நம்மவர்களோ எதிர்க்கக் கூடாது.”

“நீ எப்போதுமே இப்ப்டித்தான் பாண்டியன்! எதை யும் எதிர்க்கக்கூடாதென்கிறாய். இதோ பார்! அவர்கள் வெளியிட்டிருக்கும் துண்டுப் பிரசுரத்தில் நம்மைப் பற்றி என்னவெல்லாம் எதிர்த்து எழுதியிருக்கிறார்கள்” என்று சட்டைப் பையிலிருந்து ஒரு துண்டுப் பிரசுரத்தை எடுத்து நீட்டினான் அந்த மாணவ நண்பன்.

பாண்டியன் அதை வாங்கிப் பார்த்தான். நோட்டீசின் மேற்பகுதியில், தமிழ் வெல்க என்றும், அடுத்து மானம் மரியாதை, மதிப்பு வாழ்க’ என்றும் அச்சிட்டிருந்தது. அதன் கீழே, தமிழ்த் துரோகிகளை ஒழித்துக் கட்டத் தங்கத் தமிழகத்தின் சிங்கச் சிறுத்தைகளே ஒன்றுபடுங்கள்! இந்தப் பல்கலைக் கழகம் நமது சொந்தப் பல்கலைக் கழகமாக வேண்டுமாயின் அன்பரசனுக்கும், வெற்றிச் செல்வனுக் கும் வாக்களியுங்கள்’ - என்றும் அச்சிட்டிருந்ததோடு பெயர் குறிப்பிடாமல் பாண்டியனைப் பற்றியும், மோகன் தாசைப் பற்றியும் பழித்துக் கூறும் வாக்கியங்கள் சிலவும் அச்சிடப்பட்டிருந்தன.

அதைப் படித்துவிட்டுப் பாண்டியன் சிரித்தான். பின்பு அந்தப் பிரசுரத்தைச் சுக்குநூறாகக் கிழித்துக் குப்பைக் கூடையில் எறிந்தான்.

“எனக்குத் தெரிந்த நாளிலிருந்து ஒவ்வொரு வருடமும் இதே வாக்கியம், இதே தங்கத் தமிழகம், இதே சிங்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/33&oldid=609584" இலிருந்து மீள்விக்கப்பட்டது