பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 323

பதினைந்து நிமிஷங்களில் பத்து நிமிஷம் சந்தேகம் இருந் தால் மாணவர்கள் அவரைக் கேள்வி கேட்கலாம். ஆனால் கேள்விகள் கண்டிப்பாக ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் கேட்கப்படுகிற கேள்வியின் வாக்கிய அமைப்புப் பிழையாக இருந்தாலோ அதையே பிடித்துக் கொண்டு அந்தப் பையனை வம்பு செய்வார் என்பதனால் அவரிடம் கேள்வி கேட்க முக்கால்வாசி மாணவர்களுக்குப் பயம். கடைசி ஐந்து நிமிஷம் அட்டெண் டன்ஸ் எடுப்பார். அதோடு வகுப்பு முடிந்துவிடும். கடுமை யான லத்தீன் வார்த்தைகளைக் கலந்து சாஸர் காலத்து ஆங்கிலம்போல் மாணவர்கள் மிரளும் ஆங்கிலத்தில் அவர் லெக்சரை நடத்தும்போது சில மாணவர்களுக்குத் துக்கம் கூட வரும். துரங்குகிற ஒரு மாணவனை அவர் பார்த்துவிட்டாலோ வகுப்பில் அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு விரைவுரையின் நடுவே “லுக் அட் மீ அண்ட் ஹியர் வாட் ஐ லே. அதர்வைஸ் யூ வில் பீ தி லூலர்” என்று இரைந்து கத்துவார் அவர். அதற்குப் பயந்து புத்தகத்தைக் கோட்டைச் சுவர்போல் டெஸ்க்கில் நிறுத்தி வைத்து அந்த மறைவில் முகம் புதைத்துத் துரங்கு பவர்களும் உண்டு. சில சமயங்களில் அவரே விரிவுரை முடிந்ததும் தமக்குத் தாமே சிரித்தபடி, “கும்பகர்ணங்க இனிமே முழிச்சுக்கலாம். லெக்சர் இஸ் ஃபினிஷ்ட், நெள யூ மே ஆஸ்க் க்வஸ்ச்சின்ஸ்” என்று கூறுவதும் உண்டு. அன்றைய வகுப்பில் நவீன ஆங்கில இலக்கியம் பற்றி ஒரு சொற்பொழிவு செய்தார் காமாட்சிநாதன். முக்கால் மணி நேரம் ஒடியது தெரியவில்லை. வகுப்பு முடிந்ததும் அடுத்த வகுப்புக்குப் போவதற்கு முன் காப்பி குடிப்பதற் காகப் பாண்டியனும் வேறு நாலைந்து மாணவர்களும் காண்டீன் பக்கம் போய் வந்தார்கள். அப்போது காண்டீ னில் வேறு நாலைந்து மாணவிகளோடு மீண்டும் அந்த பி.எஸ்.ஸி. மாணவி பத்மாவைச் சந்தித்தான் அவன். அவளிடம் வம்பு செய்யும் பஸ் கண்டக்டர் பற்றிச் சக மாணவர்களிடம் அவன் தெரிவித்தபோது அந்த மாணவர் களில் உள்ளூர் வாசிகள் சிலரும் பஸ் ஊழியர்களிடம்