பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 329

நடந்தான். ஆனால் டிரைவர் கொஞ்சம் நிதானமாகவே நடந்து கொண்டு பஸ்ஸுக்குச் சேதமில்லாமல் காக்க விரும்பினான். கண்டக்டர் இல்லாமலே பஸ்ஸை எடுத் தான் அவன். வாக்குவாதம் நீடித்ததனால் டிரைவர் பஸ்ஸை எடுக்கும் போதே பத்தே முக்கால் மணி ஆகி விட்டது. பஸ் நிறைய எண்பது மாணவர்களுக்கு மேல் திணித்துக் கொண்டு நின்றார்கள். மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட பஸ் ஊழியர்களுக்கு எதிராகக் கோஷங்கள் முழங்கப்பட்டன. ஆத்திரம் அடைந்த சில மாணவர்கள் டிரைவர் எமீட்டின்மேலே வைக்கப்பட்டிருந்த மல்லை இராவணசாமியின் படத்தை உடைக்க முயன்ற போது பாண்டியன் தடுத்தான். மாணவர்கள் கட்டுப் பட்டனர். “இதுவே நம் நோக்கமல்ல! நியாயம் கேட்கப் போகிறபோது நாமே அநியாயங்களைச் செய்து கொண்டு போனால் நம் தரப்பில்தான் பலவீனங்கள் அதிகமாக இருக்கும்” என்று அவன் கூறியபோது மாணவர்கள் சிலருக்கு அவனது நிதானம் எரிச்சலூட்டினாலும் அவன் வார்த்தையை அவர்களால் மீற முடியவில்லை. அவனுக் காக அவர்கள் சிரமப்பட்டுப் பொறுமையைக் கடைப் பிடித்தார்கள்.

பஸ் மல்லை இராவணசாமியின் பங்களா காம் பவுண்டுக்குள் நுழைந்து நிற்கிறபோது மணி பதினொன்றே கால். டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிக் கூர்க்காவிடம் ஏதோ சொல்லி உள்ளே அனுப்பினான். கூர்க்கா உள்ளே போய்விட்டுத் திரும்பி வந்து டிரைவரி டம் சொன்ன பதிலைக் கேட்டு அவன் முகம் சுருங்கியது. “கொஞ்சம் பொறுத்துங்குங்க! நானே போய் ஐயாவைப் பார்த்துக் கேட்கிறேன்” என்று டிரைவரே உள்ளே போனான். அதையடுத்து உள்ளே மல்லை இராவணசாமி யின் குரல் இரைந்து கூப்பாடு போடுவது வெளியேயும் கேட்டது. டிரைவர் திரும்பி வந்து “அவரு உங்களைப் பார்க்க முடியாதாம்!” என்று எரிச்சலோடு பாண்டியனி டம் சொன்னான். உடனே பாண்டியன் மற்ற மாணவர்