பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 333

அவளைப்போலவே காலையிலிருந்து அங்கேயே இருக்கும் மாணவ மாணவிகளால் வெளியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி அதிகமாக எதையும் தெரிந்து சொல்ல முடியாமல் இருந்தது. அவள் க்ரீன் ரூமுக்குள் இருந்தபோது வந்து தகவல் சொல்லிய சக மாணவிகூட மாணவர்களும் பாண்டியனும் மல்லை இராவணசாமி வீட்டுத் தோட்டத்தில் மறியல் செய்தபடி அமர்ந்திருப்பதாக மட்டுமே தெரிவித்திருந்தாள். மாலை ஆறு ஆறரை மணிக்கு இருந்த நிலவரத்தைத்தான் அவள் தெரிவித்திருந்தாள். அதற்குமேல் அங்கே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளமுடியாமல் இருந்தது. அண்ணாச்சி கடையும் பூட்டப்பட்டு இருந்தததாக ஃபோனில் தகவல் தெரிந்ததனால் சந்தேகமும், பரபரப்பும் மேலும் மேலும் பெருகும் மனநிலையோடு இருந்தாள் அவள்.

விருந்து முடிந்ததும் டாக்டர் கருணாகர மேனோன் விருந்தினர்களையும் கதகளி கலைஞர்களையும் பாராட்டிப் பேசினார். கேரள கதகளியோடு தமிழ்நாட்டுக் குறவஞ்சியை ஒப்பிட்டுப் பேசிக் கண்ணுக்கினியாளின் நடிப்பையும் பாராட்டினார். தென்னிந்தியாவிலேயே மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகம் ஒன்றில்தான் நாடகத் துறைப் பட்டப் படிப்பு இருக்கிறது என்பதைப் பற்றியும் மேனோன் பெருமையாகச் சொல்லிக் கொண்டார். எல்லாம் முடிந்து கண்ணுக்கினியாளும் சக மாணவிகளும், விடுதி அறைக் குத் திரும்பிய போது இரவு பத்தேமுக்கால் மணிக்கு மேல் ஆகிவிட்டது. விடுதியிலே வார்டன் அறை முகப்பிலிருந்து டெலிபோன் பூத் பூட்டப்பட்டு விட்டது. மற்ற அறை களிலும் அநேகமாக விளக்குகள் அணைக்கப் பெற்று உறங்கத் தொடங்கியிருந்தார்கள். அறையில் உடனிருக்கும் மாணவி விஜயலட்சுமி தூக்கக் கிறக்கத்தோடு எழுந்துவந்து கண்ணுக்கினியாளுக்குக் கதவைத் திறந்து விட்டுவிட்டு உடனே போய்ப் படுக்கையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள். வார்டனை எழுப்பி டெலிபோன் பூத் அறையைத் திறக்கச் சொல்லிப் பேசலாமா என்கிற