பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 337

“அடுத்தவாரம் நேரு விழாவைக் கொண்டாடுகிறோம். சோஷியாலஜி பேராசிரியர் வீரராகவன் தலைமை வகிக் கிறார். நேருவின் சோஷலிச சமுதாயத்தை அமைக்கும் ஆசை அவர் காலத்திலேயே வெற்றி பெற்றது என்றும், வெற்றி பெறவில்லை என்றும் இரு அணிகளாகப் பிரித்து நாம் அந்த விழாவில் ஒரு விவாதப் பட்டிமன்றம் நடத்து கிறோம். அதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. யூனிவர்ஸிடி ஆடிட்டோரியத்தில் இந்த விழாவை நடத்தப்போகிறோம்.”

“ரொம்ப சரி! அதில் நீங்கள் எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டு விவாதிக்கப் போகிறீர்கள்?”

“நீ எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டு விவாதிக்கப் போகிறாயோ, அதற்கு நேர் எதிர்க்கட்சியை எடுத்துக் கொண்டுதான் நான் விவாதிப்பேன்.”

“அப்படியானால் உங்கள் கட்சி நிச்சயமாகத் தோற்றுத்தான் போகப் போகிறது.”

“போதும்! ஃபோனை வை. இங்கே பூத்துக்கு வெளியே ஃபோனுக்காக நிறைய மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றதை நேரில் பேசிக் கொள்ளலாம்” என்று சொல்லி அந்த நீண்ட டெலிபோன் உரையாடலை முடித்தான் பாண்டியன். பேசிவிட்டு என்.சி.சி.க்காக அவன் ஒட வேண்டியிருந்தது.

அன்று காலை வகுப்புக்களுக்கு முன் மாணவர்களை மைதானத்தில்கூடச் செய்து துணைவேந்தர் தாயுமானவ னார் இருபத்தைந்து நிமிடங்கள் அறிவுரை வழங்கினார். “மாணவர்கள் கலகக்காரர்கள் என்றே தொடர்ந்து பெயரெடுத்துவிடக் கூடாது. ஊர்வலங்களும் ஆர்ப்பாட் டங்களுமே நமது கல்வியாகிவிடாது. பஸ் ஊழியர்களோடு மோதல்களைத் தவிர்க்க வேண்டும். உங்கள் கோரிக்கை களை நீங்கள் என்னிடம் முறையாகத் தெரிவித்தால் நான் உடனே அவற்றைக் கவனிப்பேன்,” என்று அவர் பேசிய போது அதை எதிர்த்தும், நகையாடியும், கூட்ட்த்திலிருந்த

ச.வெ-22