பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 சத்திய வெள்ளம்

செயலாளர்களைத் தேர்ந்தெடுப்பது நிற்க வேண்டும்” என்று பேசியிருந்தார் அந்த அமைச்சர். கை சுத்தமில்லாமல் லஞ்ச பூஷணம் பட்டம் பெறத்தக்க அளவு மோசமான நடத்தை உள்ள அந்த அமைச்சர் மாணவர்களைப் பற்றி அப்படிப் பேசியிருந்தது மாணவர்கள் எல்லாரும் அவமானப்படுத்துவது போலிருந்தது. நல்ல வேளையாக அதே மந்திரி இரண்டு மூன்று தினங்களில் மல்லிகைப் பந்தலுக்கு வந்து பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை’ ஒன்றைத் தொடங்கி வைக்க இருப்பதாகவும் பத்திரிகை களில் அன்றே வேறொரு பத்தியில் அறிவிக்கப்பட்டி ருந்தது.

உடனே நண்பர்களைக் கலந்து பேசிக் கரியமாணிக் கத்தின் அமைச்சரவையைச் சேர்ந்த அந்த மந்திரிக்குக் கறுப்புக் கொடி காட்டித் “திரும்பிப் போ” என்ற முழக்கங் களோடு எதிர்கொள்ள ஏற்பாடு செய்தான் பாண்டியன். ஆனால் போலீஸார் அதை எப்படியோ அறிந்து பல்கலைக்கழகப் பகுதியை விட்டு மாணவர்களே வெளியேற முடியாதபடி மந்திரி வருகிற தினத்தன்று தடை உத்தரவுகள், ஐந்து பேருக்கு மேல் கூடி நிற்க முடியாதபடி ஆணைகள் எல்லாம் பிறப்பித்துவிட்டார்கள். எப்படியும் அந்த மந்திரிக்குத் தங்கள் அதிருப்தியைக் காட்ட விரும் பிய பாண்டியன் கண்ணுக்கினியாள் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகளை இரகசியமாகத் தயார் செய்து கைக்குட்டைகள் போல் சிறிய சிறிய கறுப்புத் துணிகளை மறைத்து வைத்திருக்கச் சொல்லி, பெண்கள் விடுதியை யொட்டிய சாலையை மந்திரி கடக்கும்போது கறுப்புக் கொடி பிடிக்கவும், திரும்பிப் போ’ என்ற வாசகம் அடங்கிய அட்டைகளைக் காண்பிக்க வைப்பதற்கும் திட்டமிட்டி ருந்தான். தடையை மீறுவதற்காகவோ, கறுப்புக்கொடி காட்டுவதற்காகவோ மாணவர்களைத் துன்புறுத்துவதுபோல் மாணவிகளைப் போலீஸார் துன்புறுத்த முடியாது என்பதை உணர்ந்தே மாணவிகளிடம் அந்தப் பொறுப்பை விட்டி ருந்தான் பாண்டியன். இடுப்பில் மறைத்த கறுப்புக்