பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 347

துணைவேந்தர், பதிவாளர் போன்றவர்கள் வெறுப்புக் களால் கோபம் கொள்வதையும் பேராசிரியர் பூதலிங்கம், பெண்கள் விடுதி வார்டன் போன்றவர்கள் பிரியங்களால் கோபப்படுவதையும் அவள் தரம் பிரித்து உணர்ந்ததுண்டு. கையை ஓங்கி அறைய வருவது போல் ஆத்திரமாகத் தொடங்கிய வார்டன் அம்மாள் அரவணைத்துத் தழுவிக் கொண்டது போன்ற நேசத்துடன் அந்த விசாரணையை முடித்திருந்தாள்.

மல்லிகைப் பந்தலுக்கு வந்த மந்திரிக்கு மாணவிகள் கறுப்புக் கொடி காட்டிய மறுதினம் காலைப் பத்திரிகை களில் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரி மாணவி மேரி தங்கத்தின் தற்கொலை பற்றி விசாரிக்க நியமிக்கப் பட்டிருந்த நீதி விசாரணை முடிவு வெளியாகியிருந்தது. எதிர் பார்த்தது போலவே விசாரணை முடிவு கண் துடைப்பாக இருந்தது. மணவாளனும், பாண்டியனும் தயாரித்து அனுப்பியிருந்த மாணவர்களின் சாட்சியங்கள், தஸ்தாவேஜுகள், மேரி தங்கத்தின் கடிதம் எல்லாமே பயனற்றுப் போயிருந்தன. அமைச்சர் கரியமாணிக்கத்தின் நாற்பத்தொன்பதாவது பிறந்த நாளன்று-நாற்பத் தொன்பது ஆப்பிள்களைக் கொண்டு போய்க் கொடுத்து மாலை போடுவது, அவரைப் புகழ் பாடுவதுபோன்ற காரியங் களால் நீதிபதியாக உயர் பதவி பெற்ற ஒருவரைத்தான் அந்த விசாரணைக்கு நியமித்திருந்தது அரசாங்கம். அதனால் தீர்ப்பும் பாரபட்சமாகவே இருந்தது. பதவியில் இருப்பவர் களைப் புகழ்ந்து துதி பாடுவதன் மூலமே நீதிபதிகளாக உயர்வு பெறும் மனிதர்களிடமிருந்து நீதியும் ஒழுங்காகக் கிடைக்க முடியாது என்று நிரூபிக்கப்பட்ட பல சந்தர்ப்பங் களை அந்த ஆட்சிக் காலத்தில் மாணவர்கள் கண்ணாரக் கண்டிருந்தார்கள். தூக்கத்தில் நடக்கும் வியாதியால் தவறிக் குளத்தில் விழுந்து மரணம் நேர்ந்தது என்றே மேரிதங்கம் பற்றிய விசாரணையில், தீர்ப்பு வந்திருந்தது. தற்கொலை செய்து கொள்வதாக அவளே எழுதி வைத்திருந்த கடிதம்-அவள் எழுதியது தான் என நிரூபிக்க முடியாமல்