பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 351

என்று விளக்கிப் பாண்டியனை மறுத்தாள். கைதட்டல் மாணவிகள் பக்கம் மீண்டும் பலமாயிருந்தது.

அடுத்துப் பாண்டியன் கட்சியில் தொடர்ந்து விவாதிக்க வந்த மாணவன், “எனக்கு முன் பேசிய எதிர்க்கட்சித் தலைவி கண்ணுக்குத்தான் இனியவரே ஒழியக் கருத்துக்கு இனியவரல்ல என்பதை அவரது பேச்சின் மூலமே நிரூபித்துக் காட்டிவிட்டார்” - என்று தொடங்கியபோது மாணவர்கள் தரப்பின் கைத்தட்டல்கள் அரங்கத்தை அதிர வைத்தது. அடுத்து கண்ணுக் கினியாளின் கட்சியில் தொடர்ந்து விவாதித்த மாணவி, “எதிர்க்கட்சித் தலைவரின் பெயரோ பாண்டியன். மன்னர் பரம்பரையின் ஒரு பெயர் அது. மன்னர் பரம்பரை யினரின் பெயரையுடைய ஒருவர் சமதர்மத்தைப் பற்றி வாதிட வருவதே ஏமாற்றுவேலை அல்லவா?"- என்று சாடியதும் மாணவிகள் ஆவேசமாகக் கைதட்டினார்கள். கைதட்டல் ஒய இரண்டு நிமிஷங்கள் ஆயின. இதற்கு நடுவில் பொறுமை இழந்த தலைவர் மெல்ல எழுந்து, “விவாதத்துக்குக் கொடுத்திருக்கும் தலைப்பை எல்லோருமே மறந்துவிட்டு வேறு எவற்றையோ பேசுவதாகத் தெரிகிறது. தலைப்பை மீண்டும் எல்லோருக்கும் நினைவூட்டுகிறேன்” என்று தொடங்கிய விவாதத் தலைப்பை நினைவூட்டிக் குறுக்கிட்டுப் பேசினார்.

இரண்டு மணி நேரம் விவாதம் தொடர்ந்தது. முடிவில் பாண்டியனும் கண்ணுக்கினியாளும் தங்கள் தங்கள் கட்சி விவாதங்களைத் தொகுத்துரைத்தார்கள். தலைவர் இருதரப்பு விவாதங்களையும் அலசி ஆராய்ந்து அரைமணி நேரம் பேசியபின் “நேரு விரும்பும் சமதர்ம இந்தியா அவர் காலத்திலேயே முழுமையாக உருவாகவில்லை” என்று கண்ணுக்கினியாள் கட்சிக்கு வெற்றியாகத் தீர்ப்பளித்தார். மறுபடியும் தலைவரின் மேஜைமீது ஒரு பட்டாஸ் கட்டு வந்து விழுந்து வெடிக்கத் தொடங்கியது. மாணவிகள் டெஸ்க்கில் கை ஒய்கிறவரை உற்சாகமாகத் தட்டினார்கள். காலை பத்துமணிக்குத் தொடங்கிய விவாதம் பகல் ஒரு