பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 369

கண்ணுக்கினியாளுக்கும் அவளோடு வந்திருந்த தோழிகள் இரண்டொருவருக்கும் அருவியில் குளிக்க வேண்டும் என்ற ஆசை வரவே இட்டிலிக்காகக் கொண்டு வந்த மீதமிருந்த நல்லெண்ணெயைத் தலையில் வைத்துக் கொண்டு நீராடப் புறப்பட்டுவிட்டார்கள். அந்தப் பக்கத்தில் புல்வெளி நிறையப் புள்ளிமான்கள் உலாவிக் கொண்டிருந்தன. அவற்றில் ஈன்று சில நாட்களே ஆன மிகச் சிறிய புள்ளிமான் மறி ஒன்று தத்தித் தத்தி நடந்து கொண்டிருந்தது. அருவியில் நீராடப் புறப்பட்ட பாண்டியன் அந்த இளம்மான் கன்றை இரு கைகளாலும் தூக்கி மார்போடு அணைத்தவாறே கண்ணுக்கினியாளின் முன்பு வந்தான். அவள் அவன் தன் எதிரே வந்த கோலத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவனைக் கேட்டாள்:

“ஏது மான்களைப் பிடிக்கத் தொடங்கிவிட்டாற் போல் இருக்கிறதே!...” -

“என்ன செய்வது? இது சாது மான்! உடனே பிடிபட்டு விட்டது! வேறு சில மான்கள் இருக்கின்றன. அவை எவ்வளவு முயன்றாலும் பிடிபடுவதில்லை!”

“இது சிலேடையாக்கும்..?” “நீ எப்படி எடுத்துக் கொள்கிறாயோ அப்படி..” “மாணவிகள் நீராடப் போகும் இடத்துக்கு மாணவர்கள் வரக்கூடாது. ஞாபகமிருக்கட்டும்.”

“இங்கு இருப்பது ஒர் அருவிதான்! அதில்தான் மாணவர்கள் மாணவிகள் எல்லாருமே நீராடியாக வேண்டும்.” - -

“மாணவிகள் நீராடி முடிகிற வரையில் நீங்கள் இந்தப் பக்கமே வரக்கூடாது.” •

“நான் மானைத் தேடிக் கொண்டு வந்தேன்.” “இது ரொம்பவும் பழைய வள்ளிதிருமண டெக்னிக் வேறு ஏதாவது புதிதாகப் பேசுங்கள். காப்பியடிக்கா தீர்கள்...” -

ச.வெ-24