பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 375

“நமக்கு மார்க்கத்திலும் நம்பிக்கை இருக்கிறது. பொய்கள் கரையவேண்டும் என்பதோடு சத்தியம் பெருக வேண்டும் என்றும் சேர்ந்தே ஆசைப்படுகிறோம் நாம். சத்தியம் பெருகுவதாலேயே பொய்கள் கரையவேண்டும் என்பது நம் ஆசையாக இருக்கிறது.”

“பிச்சைமுத்து உங்களை அப்பட்டமான பிற்போக்கு வாதி என்கிறார்.”

“சொல்லட்டுமே! நான் அவரை அப்படிச் சொல்ல மாட்டேன். அவர் பிற்போக்கு வாதியில்லை என்று புரிந்து கொள்கிற அளவு நான் முற்போக்குவாதி என்பதையாவது அவர் அறிந்து கொண்டால் நல்லது. நிதானத்தையே அவர் பழிப்பதற்குத் தயாராக இருந்தால் என்னை மட்டும் அவர் எப்படிப் பழிக்காமல் விட்டு வைக்க முடியும்?” என்று பொறுமையாகப் பாண்டியனுக்குப் பதில் சொன்னார் í fJGððT (3) fsTGffGðf.

நாலைந்து நாட்கள் மல்லிகைப் பந்தலில் தங்கியிருந்த பின் மறுபடியும் பட்டமளிப்பு விழாவுக்கு முன்னர் வருவதாகக் கூறிவிட்டு மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார் மணவாளன். அவர் திரும்புவதற்குள் பலமுறை கதிரேசனைச் சந்திக்க முயன்றும் முடியவில்லை. அவன் அவர் பார்வை யில் சிக்கவேயில்லை. அவர் ஊருக்குப்போன மறுநாள் பகலில் பல்கலைக் கழக காண்டினில் தேநீர் அருந்துவதற் காகப் பாண்டியனும், கண்ணுக்கினியாளும் நுழைந்த போது, உள்ளேயிருந்து கதிரேசன் நாலைந்து மாணவர் களோடு தேநீர் அருந்திவிட்டு எதிரே திரும்பி வந்து கொண்டி ருந்தான். குறுகிய வாயிலருகே ஒருவரையொருவர் தவிர்க்க முடியாமல் பாண்டியனும் கதிரேசனும் சந்தித்துக்கொள்ள நேர்ந்துவிட்டது. “ஹலோ கதிரேசன்!” என்று பாண்டியன் எதிரே வழி மறித்ததும் கதிரேசன் நின்றான். “என்னப்பா உன்னைக் காணவே முடியறதில்லை! மணவாளன் அண்ணன் வந்து நாலைந்து நாள் தங்கியிருந்தாரு. உன்னைப் பார்க்கணும்னு தவியாய்த் தவிச்சாரு. முடியலை.” - என்று பாண்டியன் தொடங்கியதும், “நான்