பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 387

மெம்பர்களின் குவார்ட்டர்ஸிலும் சோதனை செய்தி ருக்கக்கூடும். அதற்காக நான் வருந்துகிறேன். இனி அப்படி நேராது என்றும் உறுதியளிக்கிறேன்” - என்று துணை வேந்தர் பேசிக் கொண்டிருக்கும்போது பேராசிரியர் பூதலிங்கம் ஆத்திரத்தோடு எழுந்து குறுக்கிட்டார்:

“இது அக்கிரமம்! வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை என்று சொல்லியும் கேளாமல் போலிஸார் என் வீட்டிலும் வேறு சில நண்பர்கள் வீட்டிலும் அத்துமீறி நுழைந்து சோதனை என்ற பேரில் எல்லா இடங்களையும் குடைந்தி ருக்கிறார்கள். உங்கள் அநுமதியின்றி இது நடந்திருக்க முடியாது. வரவர இந்த யூனிவர்ஸிடியில் வேலை பார்க் கிறோம் என்கிற ஒரே காரணத்திற்காக எந்த அவமானத் தையும் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.”

“கோபித்துக் கொள்ளாதீர்கள் மிஸ்டர் பூதலிங்கம்! மாணவர்களோடு நெருங்கிப் பழகும் சில ஆசிரியர்கள் வீடுகளைப் போலீஸார் சோதனை செய்திருப்பார்கள்.”

“மாணவர்களோடு நெருங்கிப் பழகுவது அவ்வளவு பெரிய குற்றமென்று இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது சார்!” என்று உடனே குத்தலாகப் பதில் சொல்லிவிட்டு உட்கார்ந்தார் பூதலிங்கம். ஆசிரியர்கள் வீடுகளைக் காட்டுமிராண்டித் தனமாகச் சோதனையிட அநுமதி கொடுத்ததற்காகத் துணைவேந்தரைக் கடுமை யாகக் கண்டித்து வேறு சில விரிவுரையாளர்களும் பேசினார்கள்.

“பல்கலைக் கழக ம்ாணவர்களைக் கூர்ந்து கவனித்துத் தீவிரவாதிகள் பற்றி உங்களிடமோ ரிஜிஸ்திராரிடமோ இரகசியமாக ரிப்போர்ட் செய்யச் சொல்லி எங்களுக்கு யோசனை கூறுவதற்காகவே இன்று ஸ்டாஃப் கவுன்ஸிலை அவசரமாகக் கூட்டியிருக்கிறீர்கள்! அதே சமயம் மாணவர் களை ஏற்கெனவே கூர்ந்து கவனித்து அவர்களோடு நெருங்கிப் பழகுகிற ஆசிரியர்கள் வீட்டில் போலீஸார் ‘ரெய்ட் நடத்த அநுமதித்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்வ