பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 393

அனுப்பப்பட்டிருந்தன. மாணவர்களின் விழாக்கள், கூட்டங்கள். யூனியன் நடவடிக்கைகள் எல்லாம், அவை பல்கலைக்கழக எல்லைக்குள் நடந்தாலும், வெளியே நடந்தாலும் அளவுக்கு அதிகமாகக் கண்காணிக்கப் பட்டன. அண்ணாச்சிக் கடையைக் கண்காணிப்பதற்காக அதற்கு எதிர்ப்புறம் இருந்த மருந்துக் கடை வராந்தாவில் ‘மப்டியில் ஒரு கான்ஸ்டபிள் இருக்கத் தொடங்கினார். பல்கலைக் கழகத்துக்குள்ளும், வெளியேயும் மாணவர்கள் சுதந்திரமாக எதையும் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை யைத் துணைவேந்தரும், போலீஸும், ஆர்.டி.ஒ.வும் உருவாக்கியிருந்தார்கள். எங்கும் ஒரு பரபரப்பு இருந்தது.

கதிரேசன் கைது செய்யப்பட்டதற்குப் பின் பல நாட்கள் பாண்டியன் கண்ணுக்கினியாளையும், கண்ணுக் கினியாள் பாண்டியனையும் சந்திக்க முடியாமல் போயிற்று. யாழ்ப்பாணத்து மாணவி பாலேஸ்வரியிடம் முறை தவறி நடந்து கொண்ட போ லீ ைஸ கண் டிக் கச் சென்ற இரசாயனப் பேராசிரியர் ரீராமன் தாக்கப்பட்டது சம்பந்தமான நீதி விசாரணை தொடங்கும் தேதி நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த நீதி விசாரணைக்கான சாட்சிகளை மறுபடியும் சந்தித்து உறுதிப்படுத்துவதற்காக ஒரு நாள் காலையில் பாண்டியன் நண்பர்களோடு விடுதி களுக்குச் சென்றான். சில சாட்சிகளை மிரட்டியும், குழப்பப்படுத்தியும், ஆளும் கட்சியினரும், துணை வேந்தரும், போலீஸாருமே கலைத்துவிட முயன்று கொண்டிருப்பதாகப் பாண்டியனுக்குத் தகவல் எட்டி யிருந்தது. அவன் அப்படிப் புறப்பட்ட தினத்தன்று பல்கலைக் கழகப் பெண்கள் விடுதியை ஒட்டியிருந்த விளையாட்டு மைதானத்தின் பாட்மிண்டன் கோர்ட்'டில் கண்ணுக்கினியாளைச் சந்தித்தான். அவளோடும் தோழி களோடும் விளையாட இருந்த எதிர்த்தரப்புக் குழுவைச் சேர்ந்த பெண்கள் இன்னும் வராததால் உடனடியாக உண்டாகிய உற்சாகத்தை விடாமல், சிறிது நேரம் அவளோடு பூப்பந்து விளையாடினான் அவன். விளை