பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 சத்திய வெள்ளம்

பட்ட செய்திகள் பிரசுரமாகி மாணவர்களைக் கோப மூட்டின. தேசீயப் பத்திரிகைகளிலும், மற்ற நடுநிலைத் தினசரிகளிலுமே உண்மைச் செய்திகள் வெளிவந்திருந்தன. பொய்ச் செய்தியை ஒட்டி, “கொலை, கொள்ளை, தீவைப்பு போன்ற செயல்களில் மல்லிகைப் பந்தல் பல் கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து ஈடுபடுவதை இனி யும் நாங்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்பது போல் அமைச்சர் கரியமாணிக்கம் ஒர் அறிக்கை வேறு விட்டிருந்தார். தமக்கு டாக்டர் பட்டம் அளிக்கப் போகிற விழாவுக்கு முன் எதையாவது சொல்லி மிரட்டி முக்கியமான மாணவர்களின் இயக்க இளைஞர்களைப் பிடித்து உள்ளே தள்ளிவிட இந்த அறிக்கையின் மூலம் அமைச்சர் முயல்வது தெரிந்தது. சில பத்திரிகைகளில் ‘மல்லை இராவணசாமியின் ஜீப்பில் வந்த ஆட்களே நெருப்பு வைத்துவிட்டு ஓடினர்’ என்ற மாணவர்கள் அறிக்கையையும் பிரசுரித்துவிட்டு, அடுத்த பத்தியிலேயே அதை மறுக்கும் போலீஸ் தரப்பு அறிக்கையையும் முதலமைச்சர் அறிக்கையையும் சேர்த்தே பிரசுரித்தி ருந்தார்கள். மகாநாடு முடிந்ததுமே பொங்கலுக்கு ஊர் திரும்பலாம் என்று எண்ணியிருந்த பாண்டியன், மண வாளன், கண்ணுக்கினியாள் முதலிய எல்லோருடைய பயணமும் தடைப்பட்டன. மூங்கில் தட்டி, பந்தல் சாதனங்கள் முதலிய எல்லாமே எரிந்து சாம்பலாகி இருந்த தனால் பந்தல் காண்ட்ராக்ட் எடுத்திருந்தவருக்கு நிறைய நஷ்ட ஈடு தரவேண்டியதாகிவிட்டது. வயரிங், டியூப் லைட்டுகள், ஒளி விளக்கு, அலங்காரம் எல்லாம் அழிந்துபோன நிலையில் எலெக்ட்ரீஷியனின் சேதமும் அதிகமாகிவிட்டது. மகாநாட்டு வசூல் பணத்திலும் பெரும் பகுதி தீயில் போய்விட்டதனால் வெற்றிகரமான ஒரு மகாநாட்டு முடிவில் மாபெரும் பொருளாதாரப் பிரச்னை அவர்கள் முன் பூதாகாரமாக உருவெடுத்து நின்றது. மணவாளன் மலைத்தார். பிரதிநிதிகள், பேச வந்த பிரமுகர்கள், தங்கிய ஹோட்டல் பில் எல்லாம் பாக்கி நின்றது. மாணவர்களிடம் தலைக்கு ஒரு ரூபாயோ,