பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 433

இரண்டே வாக்கியங்களைப் பதிலாக எழுதி வர மறுக்கும் நம் வி.சி. ஆளும் கட்சியினர் நடத்தும் மூன்றாந்தரக் கூட்டங்களில் கூடப் போய் நாலாந்தரமாகப் பேசுகிறார்.” பகல் வரை அங்கேயே மணவாளனோடு இருந்தான் பாண்டியன். இரண்டேகால் மணிக்கு அண்ாணச்சி வந்தார். காலையில் எஸ்டேட் அதிபர் ஆனந்தவேலு தன்னையும் தேடிவந்ததாக அண்ணாச்சி கூறினார். “மந்திரி வரப்ப மாணவர்கள் கலாட்டாப் பண்ணாமல் இருக்கும்படி செய்திருன்னா உமக்கு என்ன வேணுமின்னா லும் செய்து தரேன்னு ஆசை காட்டினாரு.

“ஆண்டவன் புண்ணியத்திலே நான் நல்லாவே இருக்கேன். எனக்கு நீங்கள் எதுவுமே செய்து தர வேணாம்னு சொல்லி அனுப்பிச்சேன். மாணவர்களுக்கு நிறையப் பணம் தர்றேன் கான்வொகேஷன் நடக்கிறப்ப முக்கியமான மாணவர்களையெல்லாம் பிளேன் டிக்கட் வாங்கிக் கொடுத்துக் காஷ்மீருக்கு உல்லாசப் பயணம் போகச் சொல்லி அனுப்பிடலாம். நீங்களே கூட்டிக்கிட்டுப் போறதுன்னாலும் போங்கன்னு கெஞ்சினாரு முகத்திலே காரித் துப்பாத குறையாப் பதில் சொல்லித் திட்டி அனுப்பினேன். மனுசன் இதே வேலையா அலையறாரு” என்றார் அண்ணாச்சி. அதே தினம் மாலையில் மகா நாட்டுப் பாக்கிகளைக் கணக்குத் தீர்க்க ஆட்களை வரச்சொல்லியிருந்தார்கள் அவர்கள். மாலை ஏழு மணி வரையில் அந்த வேலை சரியாக இருந்தது. பாண்டியனை யும், மணவாளனையும், அண்ணாச்சியையும் அன்று மாலையில் தம் வீட்டில் இரவு உணவுக்கு வருமாறு ஃபோன் மூலம் அழைத்திருந்தார் பேராசிரியர் பூதலிங்கம். அவர்கள் எவ்வளவோ மறுத்தும் அவர் கேட்கவில்லை. கண்டிப்பாக வரவேண்டும் என்றார் அவர்.

இரவு எட்டுமணி அளவில் அவர்கள் பூதலிங்கத்தின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது அவர் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அரைமணி நேரம் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பின் சாப்பிட உட்கார்ந்தார்கள் அவர்கள். சாப்பிட்டுக் கொண்டி

ச.வெ-28