பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 சத்திய வெள்ளம்

ருக்கும் போதே பூதலிங்கம் மணவாளனை ஒரு கேள்வி கேட்டார்:

“உங்களையெல்லாம் இன்று எஸ்டேட் அதிபர் ஆனந்தவேலு வந்து சந்தித்திருப்பாரே?” .

“ஆமாம்! அது எப்படி உங்களுக்குத் தெரியும்?” “அமைச்சர் வி.ஸி.க்குப் ஃபோன் பண்ணி வி.ஸி. துது அனுப்பித்தானே ஆனந்தவேலு உங்களிடம் வந்தார்: எனக்கு நேற்றே தெரியும். நேற்றிரவு அகாலத்தில் ஆனந்த வேலு என்னைத் தேடி வந்து, உங்களை எல்லாம் நான் பார்த்துப் பேசிச் சரிக்கட்ட முடியுமா? என்று கேட்டார். ‘அது என் வேலையல்ல. என்னால் முடியவும் முடியாது’ என்று நான் கடுமையாக மறுத்த பின்பே, அவர் புறப் பட்டுப் போனார்’ என்றார் பூதலிங்கம். மணவாளனும், அண்ணாச்சியும் ஆனந்தவேலு தங்களைச் சந்திக்க வந்த அநுபவங்களைத் தனித்தனியே விவரித்தார்கள். பூதலிங்கம் அதைக் கேட்டு நகைத்தபடியே, “நன்றாக அரசாங்கத் துக்குத் தரகு வேலை பார்க்கிறார் அவர்! இவ்வளவு திறமையான வேறு தரகர் அவர்களுக்குக் கிடைக்க முடியாது” என்றார். சாப்பிட்டு முடிந்த பின்பும் நீண்ட நேரம் அமர்ந்து, அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அண்ணாச்சி, ‘ஆனந்தவேலு தன்னிடம் வந்து முக்கிய மான மாணவர் தலைவர்களை விமானத்தில் காஷ்மீருக்கு உல்லாசப் பயணம் அழைத்துக் கொண்டு போக முடியுமா?’ என்று கேட்டதைச் சொல்லியபோது பூதலிங்கத்தின் சிரிப்பு அடங்க நெடு நேரமாயிற்று.

“காஷ்மீரானால் முடியாது! நூறு மாணவர்களை ஸ்விட்ஜர்லாந்துக்கு அழைத்துப் போவதானால்தான் முடியும் என்று சொல்லிப் பார்ப்பதுதானே?’ என்று கேலியாக வினவினார் பூதலிங்கம். மறுநாள் மாலைக்குள் அவர்கள் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதனால் பிற்பகல் பஸ்ஸில் மணவாளனும் பாண்டியனும் மதுரைக் குப் புறப்பட்டார்கள். வழியனுப்ப நிறைய மாணவர்கள் பஸ் நிலையத்துக்கு வந்திருந்தார்கள். எல்லா மாணவர்