பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 சத்திய வெள்ளம்

கட்சியின் மாணவர் இயக்கப் பிரமுகர் ஒருவர், உள்ளூர் நண்பர்கள் சூழ அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததுமே, பாண்டியனுக்கு அங்கே என்ன நடக்கும் என்பதை அதுமானித்துக் கொள்ள முடிந்தது. எல்லாருமே மிகவும் பிரியமாகவும், அன்பாகவும் பாண்டியனை வரவேற்றார்கள். பிரமுகர் அவனோடு பேசலானார்.

“இன்று காலையில் இங்கே நடந்த கவியரங்கத்தில் நீங்கள் பாடிய கவிதை ரொம்ப நன்றாயிருந்ததாக எல்லாமே இவ்வளவு நேரம் பாராட்டிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கும் மகிழ்ச்சியாயிருந்தது.”

இதைக் கேட்டுப் பாண்டியன் சிரித்துக் கொண்டே வேறெதுவும் பேசாமல் இருந்து விட்டான்.

“பல்கலைக் கழகம் என்றைக்குத் திறக்கிறது? எப்போது நீங்கள் ஊர் திரும்பப் போகிறீர்கள்?”

“நான் நாளை மாலைக்குள் இங்கிருந்து மதுரை புறப்பட்டு விடுவேன். அங்கே ஒருநாள் தங்கிவிட்டு அப்புறம் நேரே மல்லிகைப் பந்தலுக்குப் போவேன். இந்தத் தடவை விடுமுறை நாட்களே குறைந்துவிட்டன. அநேகமாக நான் போன மறுநாளே பல்கலைக் கழகம் திறக்கிற தினமாக இருக்கும்.”

“உங்கள் நண்பர் மாணவர்களின் தலைவர் - மணவாளன் எப்படி இருக்கிறார்?” -

“அடேடே! மணவாளனை உங்களுக்குத் தெரியுமா?” “எதிரெதிர் முகாம்களில் இருந்தாலும் அவரை நான் மதிக்கிறேன். அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.” *

பாண்டியன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அந்தப் பிரமுகர் மெல்ல மெல்லத் தாம் வந்த காரியத்தை நினைவு கூர்ந்தவராய் மீண்டும் அவனிடம் பேசத் தொடங்கினார். “நேற்றுத்தான் சன்னாசித்தேவர் டிரங்கால்’ போட்டுச் சொன்னார். உங்களைப் பற்றி ரொம்ப நம்பிக்கையோடு புறப்பட்டு வந்திருக்கிறேன்."