பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 சத்திய வெள்ளம்

தில் பல ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான கட்டிடங் களில் இருக்கிறதே அது அல்ல எங்கள் பல்கலைக் கழகம். இந்தக் கையகலக் கடைதான் உண்மையில் எங்கள் பல்கலைக் கழகம். அந்தக் கட்டிடங்களும், புத்தகங்களும், ஆசிரியர்களும் படித்த கோழைகளிடம் உள்ளன. ஆனால் இந்தக் கையகலக் கடையோ படிக்காத மேதையிடம் இருக்கிறது. இங்கே இருக்கிற மனவிசாலம் அங்கேயுள்ள பெரிய ஹால்களில்கூட இல்லை. படித்த கோழைகள் சிலர் ஆண்டுதோறும் மேலும் பல படித்த கோழைகளை உருவாக்கி அனுப்பும் அந்தக் கூடங்களை மதிப்பதைவிட இந்தக் குடிசையை நாங்கள் அதிகம் மதிக்கிறோம். அந்தக் கூடங்களில் கற்பதைவிட இங்கே நாங்கள் கற்பதும் உணர் வதும் அதிகமானவை என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கண்ணுக்கினியாள் சற்றே கோபமான குரலில் அவரை மடக்கிக் கேட்டபோது, “என்னை அதிகமாகப் புகழாதே தங்கச்சீ! எனக்குப் புகழைப் புரிஞ்சுக்கக் கூடத் தெரியாது. நான் எதுவும் அறியாதவன்; பாமரன்” என்று தலை குனிந்தார் அண்ணாச்சி. -

மணவாளன் நாத் தழுதழுக்கச் சொன்னார்:

“இங்கே உள்ள ஐந்தரை கோடி மக்களுமே உங்களைப் போன்ற அறியாதவர்களாகப் பாமரர்களாக இருந்தால் இந்த நாடு இவ்வளவு சீரழிந்திருக்காது, இங்கே ஞானவான் களைவிடப் பட்டதாரிகளை மதிக்கிறார்கள். புத்திமான் களைவிட அதிகாரிகளைத் தொழுகிறார்கள். தொண்டனை இருளடைய விட்டுவிட்டுத் தலைவனுக்குக் கோயில் கட்டுகிறார்கள். கொள்கைகளைத் துருப்பிடிக்க விட்டு விட்டுக் கொடி மரங்களுக்குப் புதுவர்ணம் பூசுகிறார்கள். அடிப்படைகளை இற்றுப் போக விட்டுவிட்டு மாடங் களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றி னிடையே நீங்கள் ஒர் ஆச்சரியம்தான்! உங்களைப்போல் ஊருக்கு ஒர் அண்ணாச்சியை மீதம் விட்டுவிட்டு வரவில்லையே என்பதற்காக காந்தி மகானே இப்போது அங்கே சுவர்க்கத்தில் கழிவிரக்கப்பட்டு அழுது கொண்டி ருப்பார்.” -