பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 487

ருக்கும் மினிஸ்டரையே இப்போது நாங்கள் போய் சந்திக்கவா?” -

“நீங்கள் அங்கே போக முடியாது. போகக் கூடாது.” “போகிறோமா இல்லையா என்றுதான் பாருங் களேன்.” என்று இரைந்துவிட்டுத் திரும்பினார்கள் மாணவர்கள். உடன் ஆர்.டி.ஓ. ஃபோனைக் கையில் எடுப்பதைத் திரும்பும்போது மாணவர்கள் பார்த்தார்கள். அதிகார துஷ்பிரயோகம் கண் முன்னாலேயே தெரிந்தது. ஹாஸ்டல் அறைகளில் அடிபட்டுக் கொண்டிருந்த மாணவர்களின் அலறலும், கதறலும், ஒலங்களும் பல்கலைக் கழக எல்லை முழுவதும் எதிரொலித்தன. ஒரு போர்க் களம் போல் ஆகியிருந்தது பல்கலைக் கழகம். மைதானத் தில் இருந்த மாணவர்களும் துணைவேந்தர் அறைக்குப் போய்க் கேட்டு விட்டுத் திரும்பிய மாணவர்களும் சேர்ந்து நேரே பல்கலைக் கழக விருந்தினர் விடுதியை நோக்கிப் படையெடுத்தார்கள். விருந்தினர் விடுதி வாசலில் அடிக் கொரு போலீஸ்காரர் வீதம் துப்பாக்கி ஏந்தி நின்றார்கள். முன்னால் நின்ற ஒரு போலீஸ் அதிகாரி எச்சரித்தார்:"நீங்கள் உள்ளே புக முயன்றால் சுடச்சொல்லி ஆர்டிஓவின் உத்தரவு” மாணவர்களில் சிலர் ஆத்திரத்தோடு என்னைச் சுடு என்று சட்டையைக் கிழித்து நெஞ்சைத் திறந்து காட்டிக் கொண்டு முன்னேறியபோது மணவாளனும் பாண்டியனும் ஓடிவந்து முன்னால் மறித்துக் கொண்டு நின்று அவர்களைத் தடுத்தனர். இல்லாவிட்டால் சில உயிர்கள் அப்போது அங்கே பறிபோயிருக்கும். மாணவர் கள். உரத்த குரலில், “ஒரு பட்டத்துக்காக ஊரையே கொல்லும் மந்திரியே வெளியே வா” என்று கூப்பாடு போடவே - கூப்பாடு பொறுக்காமல் என்னவென்று பார்ப்பதற்காக அதே விருந்தினர் மாளிகையின் மற்றோர் அறையில் தங்கியிருந்த கவர்னர் வெளியே வந்தார். மாணவர்களை நோக்கி நடக்கத் தொடங்கிய அவரைப் போலீஸ் அதிகாரி தடுத்தும் கேளாமல் மாணவர்களை நெருங்கி வந்தார் அவர். மாணவர்களை அவருடைய அன்பான முகம் வசீகரித்தது. அருகே வந்து மண