பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 சத்திய வெள்ளம்

பறிக் கொள்ளையை விடவும் கொடுமையான துயரங் களைத் தரக்கூடியதாக முடிந்துவிடும் என்பதற்கு அந்த ஆர்டிஒ நிதர்சனமாயிருந்தார். அவரை நம்பிப்பயனில்லை என்பது புரிந்ததும் தொழிலாளர் யூனியன் அலுவலக வாயிலுக்குப் போனார்கள் அவர்கள்.

போலீஸ் லாரிகளிலும், வேன்களிலும் ஏற்றி மாணவர் களைத் தோன்றிய திசையில் வேறு வேறு பகுதிகளிலும் ஐந்து மைல் பத்து மைல் தள்ளிக்கொண்டு போய் இறக்கி விட்டுவிட்டு வருவதாக அங்கே சொன்னார்கள். மாணவர் கள் ஒன்று சேர முடியாமல் செய்ய இந்த முறையைப் போலீஸார் கடைப்பிடிப்பதாகத் தெரிந்தது.

தோட்டத் தொழிலாளர் யூனியனிலிருந்தும், விடுதி யில் வசிக்காமல் நகரில் வசிக்கும் உள்ளூர் மாணவர் களிலிருந்தும் பலரைத் திரட்டிக் கொண்டு மணவாளனும் மற்றவர்களும் போனபோது பல்கலைக் கழகம் இருண்டு கிடந்தது. ஸ்டாஃப் குவார்ட்டர்ஸ் பகுதியில் மட்டும் மெழுகு வர்த்திகள் மினுக் மினுக்’ என்று எரிந்து கொண்டி ருந்தன. அங்கே விசாரித்ததில் சுமார் நானூறு ஐந்நூறு பேர்கள் அடங்கிய ஒரு பெரிய முரட்டுக் கூட்டம் பயங்கர ஆயுதங்களோடு உள்ளே நுழைந்து மாணவர்களைத் தாக்க முயன்றதாகச் சொன்னார்கள். போலீஸார் வந்த பின்னும் அந்தக் கூட்டத்தை அவர்கள் தடுக்கவில்லை என்று சில மாணவர்கள் அறிவித்த தகவல்களிலிருந்து தெரிந்தது.

காடுமேடுகளிலும், இருட்டிலும் இறக்கிவிடப்பட்ட மாணவர்களை மீட்டு அழைத்து வர யூனியன் அலுவலகம் மூலம் ஒரு லாரி பேசி ஏற்பாடு செய்து கொண்டு உடனி ருந்தவர்களோடு புறப்பட்டார் மணவாளன். நல்ல வேளை யாக மல்லிகைப் பந்தல் நகரிலிருந்து வெளியேறும் சாலை கள் இரண்டைத் தவிர வேறு இல்லை. அந்த இரண்டு சாலைகளிலும்தான் பல இடங்களிலும் மாணவர்களை மாற்றி மாற்றி இறக்கி விட்டிருப்பார்கள் என்று அனு! மானித்துக் கொண்டு அவர்களைத் தேடிக் கொண்டு சென்றார்கள் மணவாளன் முதலியவர்கள்.