பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 51

மாணவர் பேரவைத் தேர்தலையே நடக்கவிடாமல் செய்ய அரசாங்கம் முயல்வதாகத் தெரிந்தது. அப்போது துணை வேந்தராயிருந்த டாக்டர் தாயுமானவனார், அரசாங்கத் தின் தயவுக்குக் கடன்பட்டவர் என்பது பல சந்தர்ப் பங்களில் நிரூபணமாகியிருந்தது. மாணவர்கள் எல்லாருக் கும் அவரைப் பற்றி நன்றாகத் தெரியும்படி நடந்து கொண்டிருந்தார் அவர் பதிவாளர், துணைப் பதிவாளர், எல்லாரும் துணைவேந்தர் சொல்கிறபடி பயந்து நடக் கிறவர்கள். பிரதம தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டி ருந்த பொருளாதாரத் துறைத் தலைமைப் பேராசிரியர் பூதலிங்கம் மட்டும் ஒரளவு சுதந்திரமான சிந்தனைப் போக்கு உள்ளவர்.துணைவேந்தர் கூட்டியிருக்கும் அவசரக் கூட்டத்துக்குப் போவதாயிருந்தால் பூதலிங்கத்தை மதித்துத் தான் போக வேண்டும். வேறு யாரும் மாணவர்கள் தரப்பில் ஆதரித்துப் பேசுகிற அளவு சுதந்திரமான மனப் போக்குள்ளவர்கள் அங்கே இல்லை. -

இரவு பத்து மணி வரை அந்த அவசரக் கூட்டத்துக் குப் போவதா வேண்டாமா என்ற தயக்கமான சிந்தனை யிலேயே கழிந்துவிட்டது. இதற்குள் டிபுடி ரிஜிஸ்டிரார் இரண்டுமுறை ஃபோனிலும் கூப்பிட்டு வரச் சொல்லி விட்டார். துணைவேந்தர், பதிவாளர், எல்லாருமே அவசரப்பட்டு எதற்கோ பறப்பது தெரிந்தது. காரசாரமான விவாதங்களுக்குப்பின் மோகன்தாஸும் பாண்டியனும் மற்ற இருபத்தைந்து பிரதிநிதிகளுமாகத் துணை வேந்தர் கூட்டியிருக்கும் அந்த நள்ளிரவுக் கூட்டத்துக்குப் போவ தென்று முடிவாயிற்று. -

வெளியே குளிர் அதிகமாயிருந்தும் பொருட்படுத் தாமல் அவர்கள் துணைவேந்தர் மாளிகைக்குப் புறப் பட்டுப் போனார்கள். மாளிகையின் முன் கூடத்தில் துணைவேந்தர், பதிவாளர், துணைப் பதிவாளர், பொருளா தாரப் பேராசிரியர் எல்லாரும் மாணவர்களை எதிர்பார்த் துக் காத்திருந்தனர். பாண்டியனும் நண்பர்களும் அங்கு போவதற்கு முன்பே எதிர்த்தரப்பைச் சேர்ந்த அன்பரச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/53&oldid=608836" இலிருந்து மீள்விக்கப்பட்டது