பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 57

உங்களுக்கு நான் சொல்ல முடியும்?” என்று கூறிப் புன்னகை பூத்தார் பேராசிரியர்.

“இந்தக் கூட்டத்தில் நீங்கள் ஒருவராவது எங்கள் மனநிலையைப் புரிந்து கொண்டவராக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது சார்!”

இதற்குள் துணை வேந்தரும் மற்ற இருவரும் உட்புறம் ஆலோசனை முடிந்து திரும்பிவிட்டார்கள்.

“எங்கள் முடிவு நாளைக் காலையில் பத்துமணிக்கு ரிஜிஸ்திரார் ஆபீஸ் நோட்டீஸ் போர்டில் அறிவிக்கப்படும். இப்போது நீங்கள் போகலாம். இந்த அகாலத்தில் என் வேண்டுகோளை ஏற்று வந்ததற்கு நன்றி” என்ற துணை வேந்தர் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். கலந்து பேசி விவாதித்து முடிவு செய்வதற்குக் கூப்பிட்டு விட்டுத் தாமே செய்து கொண்ட ஒரு முடிவை, மறுநாள் காலையில் அறிவிப்பதாகத் துணைவேந்தர் சொல்லியது அவர்களுக்கு அதிருப்தி அளித்ததோடு எரிச்சலூட் டியது. உட்புறம் சென்ற துணை வேந்தர் யாருடனாவது டெலிபோனில் பேசிவிட்டு வந்திருக்கக் கூடும் என்று மாணவர்களால் மிக எளிதாகவே அநுமானித்துக் கொள்ள முடிந்தது.

துணைவேந்தர் மாளிகையிலிருந்து அவர்கள் புறப் பட்டபோது இரவு மணி பன்னிரண்டாகிவிட்டது. அப் போது பனியும் மலைக் குளிரும் மிகக் கடுமையாக இருந்தது. மூச்சு விட்டால் வாயிலிருந்தும் நாசியிலிருந்தும் புகை வருவது போல் தோன்றியது. துணைவேந்தர் மாளிகையிலிருந்து சிறிது தொலைவில்தான் பொருளா தாரப் பேராசிரியரின் வீடு இருந்ததென்றாலும் அவரும் மாணவர்களோடு சேர்ந்தே அங்கிருந்து வெளியேறினார். துணைவேந்தர் மாளிகையிலிருந்து மாணவர் விடுதிகளுக் கும், பேராசிரியர்களின் வீடுகள் இருந்த ஸ்டாஃப் குவார்ட்டர்ஸுக்கும் ஒரே சாலையாகப் போய்ச் சிறிது தொலைவு சென்றதும் வழிகள் பிரியும். அந்தச் சாலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/59&oldid=608824" இலிருந்து மீள்விக்கப்பட்டது