பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 63

குடையோடும் குடையின்றி நனைந்து கொண்டும் பாண்டி யனைக் காணக் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கி விட்டார்கள். உடனே பார்க்க வருவதற்காகத் துடிப்பதா கவும் வார்டன் அம்மாள் பெண்கள் விடுதியிலிருந்து யாரையும் வெளியில் அனுப்புவதற்குக் கண்டிப்பாக மறுப்ப தால் வரமுடியாமல் இருக்கிறது என்றதும் கண்ணுக் கினியாள் ஃபோன் செய்தாள். ஃபோனில் அவள் குரல் கவலை நிறைந்து ஒலித்தது. கண்கலங்கி அழுது கொண்டே பேசுகிறாற் போன்ற -குரலில் பேசினாள் அவள்.

“கவலைப்படும்படி எனக்கு எதுவும் நேர்ந்துவிட வில்லை. முடிந்தால் பத்தே கால் மணிக்கு ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ் வாசலுக்கு வா. நேரில் பேசுவோம். இன்று காலை பத்து மணிக்குப் பேரவைத் தேர்தல் உண்டா இல்லையா என்பது பற்றி நோட்டீஸ் போர்டில் ஒரு முக்கியமான அறிவிப்பை ஒட்டுகிறார்கள். அதைப் பார்ப்பதற்காக நான், மோகன்தாஸ் எல்லாரும் அங்கே வருவோம்” என்று பாண்டியன் கூறியதும் எப்படியாவது முயன்று ரிஜிஸ் திரார் அலுவலக வாயிலில் அவனைச் சந்திப்பதாக அவள், மறுமொழி கூறினாள். மறுநாள் மாலையில் லேக் வியூ ஹோட்டலில் மணவாளனுக்கு நடைபெறும் பிரிவுபசார விருந்து பற்றிக் கூறி அதற்கும் அவள் முன்பாகவே வந்து கூட இருந்து முடிந்த உதவிகளைச் செய்யும்படி வேண்டி னான் பாண்டியன், அதைப்பற்றி ஏற்கெனவே அண் ணாச்சி தன்னிடம் ஃபோனில் தெரிவித்திருப்பதாக அவள் சொன்னாள். அவன் ஃபோன் பேசிவிட்டுத் திரும்புவதற் குள் அறையிலும் வராந்தாவிலுமாகப் பெருங்கூட்டமாய் மாணவர்கள் கூடிவிட்டார்கள். மாணவர் பேரவைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்டால் பல்கலைக் கழக நிர்வாகத் தைச் சும்மா விடக்கூடாது என்கிற அளவுக்கு எல்லாரும் கடுஞ்சினத்தோடு இருந்தார்கள். -

“பழைய வி.சி. உலக நாடுகளில் உள்ள பிற பல்கலைக் கழகங்களையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு அந்தப் பல்கலைக் கழகங்களின் தரத்துக்கு இதை உயர்ந்த வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/65&oldid=608810" இலிருந்து மீள்விக்கப்பட்டது